உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கடிதம் -4

என் அருமைக்காதலரே,

6

காணக்

நான் இங்கே திருவல்லிக்கேணிக்கு வந்து ஒருமாத காலமாய் விட்டது. இந்த ஒரு மாதமும் உமக்குக் கடிதம் எழுதச் சமயம் வாய்க்கவில்லை. நீர் என்னைப்பற்றிஏது நினைத்துக் கொண்டீரோ! உம்முடைய திருமுகத்தை யான் ய கிடையாமற் கழிந்த இவ் வொருமாதகாலமும் எனக்கு மிகவும் பொல்லாதகாலம். யான் உமக்குக் கடிதம் எழுதவும் உம்முடைய கடிதத்தை, யான் காணவும் பெற்றால் என் உள்ளம் ஒருவாறு ஆறுதல் அடைந்திருக்கும். அவ்வளவுக்கும் இடம் இல்லாமற் போய் விட்டதே! உம்மை நினைந்துநினைந்து பாவியேன் நெஞ்சம் நெகிழுகின்றது. என் சிந்தையெல்லாம் உம்மேற் பதிந்து அல்லும் பகலும் உம்மையே நினைந்திருப்பதனாலேதான் என்னுயிர் உடம்பிற்றங்கியிருக்கின்றது. இங்கே வந்தநாள் முதல் உம்மைத் திடீரெனப் பிரிந்ததனால் உண்டான வருத்தம் என்னுடம்பையும் அரைவாசி ஆக்கிவிட்டது. உணவும் உண்பதில்லை, உறக்கமும் கொள்வதில்லை. இந்த வீட்டிலுள்ளவர்களிற் பெரும்பாலும் எல்லாரும் என்னை வெறுக்கின்றார்கள். இங்கே என்னிடத்தில் இரக்கமுகங் காட்டுகிறவர் ஒரே ஒரு கிழவனார்தாம், இவரை என் மாமனார் என்கிறார்கள். இவருடைய ஆதரவு இல்லாவிட்டால் இங்கே யான் ஒரு நிமிஷங்கூட உயிர்வாழ முடியாது. என் மாமியார் என்று சொல்லப்படுகிறவள் பொல்லாத கிழப்பிசாசு; என் நாத்துனார் கொடியபட்டி; என்மைத்துனன் என்பவன் ஒரு பெருந் தலையெடுப்புள்ளவன். இவர்களுக்கும் எனக்கும் எந்நேரமும் ஓயாத போராட்டமாக இருக்கின்றது.நச்சுப்பாம்பு களாற் சூழப்பட்ட ஒரு குடிசையில் மந்திரக்காரன் ஒருவனது உதவி பெற்று வசிப்பவர் ஒருவரைப் போல யான் இவர்கள் நடுவிலே என் மாமனார் உதவியால் ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டிருக்கின்றேன். யான் இங்கே வந்த ஏழெட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/65&oldid=1582023" இலிருந்து மீள்விக்கப்பட்டது