உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

37

நாளைக்குப் பிறகு மாமியார் என் மேற் பெருஞ்சண்டை தொடுத்தாள்.

66

என்னடி, நீ கலகல என்று பேசாமல் இப்போதுதான் புருஷனைப் பறிகொடுத்தவள்போல் இருக்கிறாயே?” என்று மாமியார் வம்புக்கு இழுத்தாள்.

66

அதற்கு நான் ஒன்றும் பேசாமல் இருக்கவே, நாத்துணார் கடுகடுத்த முகத்தோடு, தன் தாயின் முகத்தைப் பார்த்து, ‘நீ சொல்லுவது அவள் காதில் நுழையவில்லை, அவள் யாரோ புருஷாள்மேல் நினைவாயிருக்கிறாள். அவளைப் பார்த்தால் முண்டைச்சிமாதிரியாகவா இருக்கிறது. இப்போது தான் கல்யாண மணைமேல் உட்காரப் போகிறவளைப்போல் இருக்கிறது. தலையில் மயிரைப்பார்! எவ்வளவு பளப்பளப்பா யிருக்கிறது! காதில் சிவப்புத்தோடு நெருப்பு எரிகிறது போலிருக்கிறது; கழுத்தில் தங்கச் சங்கிலி, பொத்தான் வைத்த பட்டுரவிக்கை, உயர்ந்த பட்டுப் புடவை, கையில் தங்கக் காப்புக்

கொலுசு, எவ்வளவு ஒய்யாரம்! எவ்வளவு சிங்காரம்! உடம்பைப்பார்! மினுமினுவென்று இருக்கிறது. அவளுக்குக் கவலையேது? விசனம் ஏது? இவளை வைக்கிறபடி வைத்தால் இவளுக்கு இவ்வளவு ஒயில் உண்டாகுமா? ஏண்டியம்மா, இவள் தலையை ஏன் மொட்டை அடியாமல் விட்டு விட்டீர்கள், ஐயங்காரப் பெண்பிள்ளைகளுக்கு அல்லவோ தலையில் மயிர் வைக்கிற வழக்கம், நம்ம ஸ்மார்த்தச் சாதியில் அப்படி வழக்கம் இல்லையே?" என்று கேட்டாள்.

66

ஆமடியம்மா, அந்தக் கொடுமையை என்ன சொல்லுகிறது! நம்ம ஆண்பயல்கள் பறைப்பாஷைபடிக்கத் தொடங்கி இவ்வளவு குட்டிச்சுவரும் உண்டானது. உண்டானது. நாங்கள் எல்லாம் இவள் ஆமுடையான் இறந்தவுடனே இவள் தலையை மொட்டை L அடித்துவிட வேண்டு மென்றுதான் சொன்னோம். நம் பயல் ராமசாமியும் இவள் தமையன் சுப்பிரமணியனுந்தாம் மயிர் வாங்கப்படாதென்று குறுக்கே கிடந்தார்கள். அந்த இளம் பயல்கள் பேச்சைக்கேட்டு நம்ம கிழப்படுவானும் இவன் பெற்றோரும் சரி சரியென்று ஒத்துக்கு மத்தளங்கொட்டி, இவளுக்கு இன்னுங் கொஞ்சம் வயசானபின் மயிரை எடுத்து விடலாம் என்று மெழுகிப் பேசிவிட்டார்கள். இவள் ஆமுடையான் இறந்தபோது இவள் எட்டுவயதுக் குழந்தையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/66&oldid=1582024" இலிருந்து மீள்விக்கப்பட்டது