உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

❖ LDM MLDMOLD-14 →

இருந்தபடியால், இனத்தாரும் இரக்கப்பட்டு ஒன்றுஞ் சொல்லாமல் இருந்து விட்டார்கள்.பிறகு இவள் பருவமாகி இந்த நாலைந்து வருஷங்களாக இவள் தலைமயிரை எடுத்துவிட வேண்டுமென்று நான் சொல்லி வந்தும் என் சொல்லைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை. அங்கேயிருந்தால் இவள் தமையன் சுப்பிரமணியனால் கெட்டுப் போகிறாள்; இங்கே வந்தால் நம்ம கிழப்படுவான் இவளுக்குச் செல்லங் கொடுத்துக் கெடுத்து விடுகிறான்” என்று அவளை நோக்கி விடை பகர்ந்தாள்.

தன் தாயின் சொற்களைக் கேட்ட அவள் பின்னுங் கொந்தளிப்பு உடையவளாகி,“அவர்களுக்குத்தாம் அறிவில்லாமற் போனாலும் இருபது வயசுப் பெண் பிள்ளையாகிய இவளுக்கு அறிவு எங்கே போனது. என்றைக்குப் புருஷனை இழந்தாளோ அன்றைக்கே எல்லாவற்றையும் இழந்தாள். இன்னும் இவள் தலையில் மயிர் வைத்திருப்பதும் அலங்காரம் செய்துகொள்வதும் எந்தப் புருஷனுக்காக. இவளுக்குள்ள அகங்காரத்தை என்ன வென்று சொல்லலாம்!” என்று நாராசத்தைக் காய்ச்சி என் காதில் ஊற்றினாற் போலச் சுடுமொழிகளைச் சொன்னாள்.

இதுவரையில் வாய்பேசாமல் அமைதியோடுங் கேட்டுக் கொண்டிருந்த நான் மனவருத்தம்மிகுந்து “ஏன் நீங்கள் என்னை இப்படியெல்லாம் பழித்துப் பேசுகிறீர்கள்? உங்களுக்கு நான் யாது குற்றம் செய்தேன்?” என்று வினவினேன்.

அதற்கு நாத்துணார் பதைபதைத்து, “நீ தாலி அறுத்தவள் அல்லவா? உனக்கு இவ்வளவு அலங்காரங்களும் எதற்காக என்றாள்.

அதன் மேல் “தாலி அறுத்தவள் என்று நீ என்னை ஏன் ஏசுகிறாய்?” என்று மீட்டும் வினவினேன்.

66

என்னடி 'ஒன்றும் அறியாத அம்முக்கள்ளிபோற் பேசுகிறாய்? பாவி உன்னைக் கட்டாமல் இருந்தால் என தமையன் இன்னும் உயிரோடே இருப்பான்; உன்னைக் கட்டின மறுவருஷமே அவன் இறந்து போனான்; நீ மாத்திரம் குத்துக் கொழுக்கட்டை போல் இருக்கின்றாய்” என்று சினந்து கூவினாள்.

“வீணான பழிச் சொற்களை என்மேல் நிரப்ப வேண்டாம். உனக்கே ஐம்பது வயதுக்குமேல் ஆகின்றது, உன் தமையன் இப்போதிருந்தால் ஐம்பத்தேழு வயதுக்கு மேற்பட்டவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/67&oldid=1582025" இலிருந்து மீள்விக்கப்பட்டது