உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ LDMMLDMELD -14❖

இப்படியல்லாமல், இருவர் சம்மதமும் இன்றிப் பொருத்தஞ் சிறிதும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பது போலப் பிணைத்து விடுவதும், அங்ஙனம் பிணைக்கப்பட் இருவரும் ஒற்றுமையும் அன்பும் இன்றி மனவருத்தத்தோடு காலங் கழிப்பதும், அவருள் மனைவி என்னப்பட்டவள் இறந்தால் கணவன் என்னப்பட்டவன் பல்லுஞ்சொல்லும் போன கிழவனா யிருந்தாலும் அவனுக்குப் பால் குடிக்கும் பாலகனான ஒரு பெண்மகவை மணம் புரிந்து விடுவதும், கணவன் என்னப் பட்டவன் இறந்தால் மனைவி எவ்வளவு சிறுபருவத்தினளா யிருந்தாலும் அவள் தலையைச் சிரைத்து அணிகலன்களை நீக்கி வெள்ளைக் கோணிப் புடைவை வை உடுப்பித்து உப்பில்லாச் சோற்றையிட்டு வருத்துவதும் ஐயோ! என்ன கொடுமை! பிறருடைய வலுகட்டாயத்தால் மணஞ் செய்விக்கப்பட்டு மிக்க வருத்தத் தோடும் அவனோடு சிலநாள் இருந்து வயது முதிர்ந்த அவன் இறந்துபோகவே சுமை நீங்கியதென ஒருவாறு ஆறுதல் அடைந்திருக்கும் ஏழைப் பெண்ணின் தாலியை அறுத்தால் என்ன, அவள் தலையைச் சிரைத்தாலென்ன, ஆடை அணிகலன் களைக் கழற்றியதாலென்ன, உப்பில்லாப் புற்கையை இட்டதனா லென்ன, அவள் மனம் இறந்தவனைச் சிறிதும் நாடாது; அவள் கண்கள் அவன்பால் அன்பினால் நீரைச்சொரியா.

ஆடுமாடுகளைப் பிணைப்பதுபோல ஆண்மக்களையும் பெண் மக்களையும் பிணைப்பதனாலேதான் இந்த நாட்டில் எல்லாவகையான தீய ஒழுக்கங்களும் தீங்குகளும் ஒன்றுக்குமேல் ஒன்றாகப் பெரு பெருகி வருகின்றன. கணவனும் மனைவியும் அன்பினாற் பொருந்துவார்களாயின் உலகம் அப்போதுதான் சிறப்படையும், தீமைகளெல்லாம் அப்போதுதான் ஒழியும்.

உன் தமையனை எனது ஏழாவது வயதில் என் கணவனாக நினைந்து யான் அன்புபாராட்டியதில்லை, கணவனும் மனைவியும் நடந்துகொள்ள வேண்டிய முறை இன்னதென்று தெரிந்ததுமில்லை. நான் தாலி அறுத்தவளும் அல்லேன். கணவனை இழந்தவளும் அல்லேன், 'யான் அன்றும் கன்னிப் பெண்ணே, இன்றும் கன்னிப் பெண்ணே,கன்னிப்பெண்ணுக்குரிய எல்லா மங்கல அலங்காரங்களும் எனக்கு உரியனவேயாகும்.நீங்கள் ஒரு காரணமும் இன்றி என்னை இப்படியெல்லாம் பழித்துப் பேசுவது தகாது” என்று மிக்க சுருசுருப் போடும் உருக்கத்தோடும் பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/69&oldid=1582027" இலிருந்து மீள்விக்கப்பட்டது