உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

41

என் சொற்களைக் கேட்டுச் சிறிதுநேரம் திகைத்து நின்ற அவ்விருவரில் மாமியார் என்பவள் மூக்கின்மேல் முன்விரலை வைத்து,

66

"இவள் அதிகப் பிரசங்கியாய் விட்டாளே. இவள் ஏதோ நாம் படித்திருக்கிறோம் என்னும் இறுமாப்பினால் அல்லவோ இவ்வளவு தூரம் மூச்சுவிடாமற் பேசினாள். 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேதுக்கு' என்பது சரியாகவேயிருக்கிறது. படிப்பில்லா வி விட்டால் மூத்தோர் சொல்லை மீறி இவள் இவ்வளவு பேசுவாளா’- என்று அவள் கூக்குரலிட்டுப் பேசுயிைல் வெளியே போயிருந்த மாமனார் வந்துவிட்டாராகையினால், அவர் ‘அடி, போதும், போதும், உன் சொல்லை நிறுத்து, அந்தக் குழந்தையை ஏண்டி புறக்கணிக்கிறாய்? நீ தான் படிப்பில்லாத மூடமாயிருக்கிறாய். அந்தக் குழந்தையையும் உன்னைப்போல் மூடமாக்கப் பார்க்கிறாயோ” என்று பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே வந்தார். அவர்களிருவரும் மிகப் பொல்லாதவர்களா யிருந்தாலும் மாமனாரைக் கண்டவுடனே திடுக்கிட்டுக் “கிழப்படுவான் வந்திட்டான்; இனி இவளுக்குக் கொண்டாட்டந் தான்” என்று சொல்லிக்கொண்டே சமயற்கட்டுக்குப் போய் விட்டார்கள். மற்றையவும் நீர் எனக்குக் கடிதம் எழுதவேண்டிய விலாசமும் பின்பு தெரிவிக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/70&oldid=1582028" இலிருந்து மீள்விக்கப்பட்டது