உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கடிதம் - 5

என் அன்பிற்கினிய நேசரே,

-

நாலைந்து நாட்களுக்கு முன் நான் எழுதிய கடிதம் உமக்குச் சேர்ந்திருக்கலாமென்று நம்புகிறேன். இந்த நாலைந்து நாட்களும் மாமனார் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தமையால், மாமியாரும் நாத்துணாரும் வாய் திறந்து என்னை வைது வருத்தாமலிருந்தார்கள் என்றாலும், யான் அவர்கள் இருக்கும் சமயற்கட்டுக்குப்போனால் முகக்கடுகடுப்பும் வாய் முணுமுணுப்பும் அவர்களிடமில்லாமல் இருப்பதில்லை. அவர்களுடைய தொந்தரவுக்கு அஞ்சி அவர்களிருக்குமிடத்திற்கு நான் அடிக்கடி போவதில்லை. முன்கட்டு மேல் மெத்தைமேல் மாமனாரோடு கூடவே இருந்து வருகிறேன். ஆகாரமும் இவர் தம்முடனிருந்து உண்ணும்படி எனக்குக் கற்பித்திருக்கிறார்.யான் உறங்குவதும் மேல்மெத்தையில் இவர் அறைக்குப் பக்கத்திலே தான். இவருடைய உயர்ந்த குணங்களானவை எனக்கு மிகுந்த வ மகிழ்ச்சியைத் தருகின்றன. கள்ளங்கவடு அறியாப் பால்போலுந் தூய உள்ளம் உடையவராயிருக்கின்றார். எண்பது வயதிற்கு மேற்பட்டவராயிருந்தும், இவர் அறிவு மிகவுந் தெளிவுடைய தாகவே இருக்கின்றது. ஆங்கில நூற் கல்வியில் மிக வல்லவ ராயிருக்கின்றார். எனக்கு ஆங்கிலமொழியில் மிகுந்த ஆராயச்சி ல்லா விட்டாலும் அவர் அந்நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லும் பொருள்கள் எனக்கு அளவிறந்த வியப்பையும் மகிழ்ச்சியையுந் தருகின்றன. உலக இயற்கைப் பொருள்களான மலையங்காடு பள்ளத்தாக்கிலுள்ள தோப்புகள் கான்யாறு, மலைப் பக்கத்து ஏரிகள் அங்கங்கேயுள்ள பலவகைப் பறவைகள் மிருகங்கள் முதலியவற்றைப் பற்றிய ஆங்கிலப் பாட்டுகளை அவர் இன்று எனக்கு எடுத்துச் சொல்லியபோது, நானும் அவற்றைப் போலவே நம்முடைய சங்கத்தமிழ் நூல்களிற் பாடப்பட்டிருக்கும் இனிய செந்தமிழ்ப் பாடல்களை எடுத்துப் பாடினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/71&oldid=1582029" இலிருந்து மீள்விக்கப்பட்டது