உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

43

அவற்றை அவர் கேட்டவுடன், "இவ்வளவு அருமையான பாட்டுகள் பழைய தமிழில் இருப்பது எனக்குத் தெரியாது, தெரிந்தால் அவற்றைப் படித்து ஆனந்தித்திருப்பேன். பிற்காலத்தில் கம்பர் முதலான சிலர் பாடிய பாட்டுகளை மாத்திரம் கேட்டிருக்கிறேன்; இவர்கள் பாட்டுகளில் இயற்கைப் பொருள் வருணனைகள் மிகுதியாய் இல்லாமல், பொய்யும் புளுகும் நிறைந்த கற்பனைகளே நிரம்பி யிருந்தமையால் அவற்றில் எனக்கு விருப்பஞ் செல்லவில்லை. ஆயினும், தமிழில் திருவள்ளுவர் செய்த திருக்குறளிலும், மாணிக்கவாசகர் செய்த திருவாசகத்திலும் மாத்திரம் எனக்கு மிகுந்த பிரியம். இவ்விரண்டு நூல்களுக்குஞ் சமானமானது உலகத்தில் வேறெந்த நூலும் இல்லையென்பதே என் அபிப்பிராயம். நல்லதம்மா, உனக்குத் திருவாசகத்திற் குயிற்பத்துப் பாடமிருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்குயான், “ஆம், அதுபாடமாயிருக்கிறது” என்றேன்.

66

களாய்

விட்டன"

“நீ வீணைவாசித்ததைக் கேட்டு இரண்டு மூன்று வருஷங் என்று சொல்லி, அங்கே கூடத்தின் வடவண்டை மூலையில் உறைபோட்டுச் சார்த்தி வைக்கப் பட்டிருந்த வீணையைச் சுட்டி, "அதோ உள்ள அந்த வீணையை எடுத்து வந்து மீட்டிக் குயிற்பத்தை உன் இனிய குரலோடு கலந்து அதில் வாசி” என்று மனமகிழ்ந்து சொன்னார்.

அவர் சொன்ன வண்ணமே அவ்வீணையை எடுத்து வந்து அதன் உறையைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு, வீணையின் நரம்புகளைத் தெறித்து, என் குரலுக்குப் பொருந்த இசைகூட்டி மாணிக்கவாசகப் பெருமானைச் சிந்தித்து அவர் அருளிச் செய்த குயிற்பத்தின் முதற்பாட்டாகிய,

“கீதமினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால் சோதிமணிமுடி சொல்லிற்சொல்லிறந்துநின்றதொன்மை ஆதிகுணமொன்றும் இல்லான் அந்தமிலான் வரக்கூவாய்!”

என்பதை மனம் நெக்குருகிப் பாடினேன். அதனைக் கேட்ட போது அவர் அடைந்த ஆனந்தத்தை இவ்வளவென்று “வாய் விட்டுச் சொல்ல முடியாது. அவர் கண்களில் நீர் முத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/72&oldid=1582030" இலிருந்து மீள்விக்கப்பட்டது