உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் -14

று

முத்தாயத் துளித்தது. தன்னை மறந்து அவர் அடிக்கடி “என் அப்பனே, ஆண்டவனே, மாணிக்கவாசகப் பிரபு, உன்னைப் போலச் சிவத்தின் உண்மையைக் கண்டவர் யார்!" என்று சொல்லிச் சொல்லித் தேம்பினார். அந்தப் பாட்டு முடிந்தவுடனே அவர் என்னை நோக்கிக் குழந்தாய் உனது குயில் போன்ற குரலில் இக்குயிற்பாட்டைக் கேட்கும்போது, மாணிக்கவாசகரே ப்போது இங்கிருந்து ஒப்புயர்வற்ற அந்தச் சிவத்தைப் பாடுவது போல் இருக்கின்றது; ஆ! இதுதான் சிவானந்தம்! இப்படிப்பட்ட சிவானந்தப் பாடல்கள் இருக்கையில் பாழுஞ் சங்கீத வித்வான்கள் பாழான கீர்த்தனைகளையும் மற்றவை களையும் பாடி மனிதப் பிறவியைப் பாழாக்குகிறார்களே! இப்போது உனது அழகிய வடிவத்தைப் பார்த்தால் அந்தச் சரஸ்வதி மாதாவைப் போலவே இருக்கிறது. நீ வீணைவாசிப்பது அந்த மாதா வீணாகானஞ் செய்வது போலவே இருக்கின்றது. நல்லது, குயிற்பத்தில் இன்னுஞ் சில பாட்டுகள் பாடு" என்றார். உடனே யான்,

"நீல வுருவிற் குயிலே நீண்மணி மாட நிலாவுங்

66

கோல வழகிற் றிகழுங் கொடிமங்கை யுள்ளுறை கோயில் சீலம் பெரிது மினிய திருவுத்தரகோச மங்கை

ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவாய்.'

காருடைப்பொன் றிகழ்மேனிக்கடிபொழில்வாழுங் குயிலே சீருடைச் செங்கமலத்திற் றிகழுரு வாகிய செல்வன்

பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாச மறுத்தெனை யாண்ட ஆருடை யம்பொனின் மேனி யமுதினை நீவரக் கடவாய்".

என்னுஞ் செய்யுட்களை மிக மனம் உருகிப் பாடினேன். இவற்றைப் பாடும்போதுஎன் அருமை நாயகனாகிய உம்மைப் பிரிந்திருப்பதும். உம்மை என்னிடத்தே வரும்படி என் மனம் இடைவிடாது விரும்புவதும் என்நினைவில் எழுந்தன. என் செய்வேன்! எந்தப் பாட்டைப் பாடினாலும், எந்த நூலைப் படித்தாலும் உம்மைப் பற்றிய நினைவே எனக்கு எப்போதுந் தோன்றுகின்றது; என் நெஞ்சத்தில் வேறு ஒரு நினைவுக்கு இடஞ் சிறிதுமில்லை; உமது நினைவே அதனை முழுதுங் கவர்ந்து கொண்டது. காதலர் களுக்குள் நிகழும் இந்நேசத்தின் வலிமையை என் என்பேன்! து வேறெந்த நினைவும் நிகழ இடங்கொடாமல் அவர் சிந்தையை முழுதுந் தன்வசப்படுத்திக் கொள்கின்றது. மற்ற நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/73&oldid=1582031" இலிருந்து மீள்விக்கப்பட்டது