உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் -14

"மாமா, வேறொன்றும் இல்லை. மாணிக்கவாசகர் அன்பின் விசேஷத்தை எண்ணி எண்ணி என்மனம் உருகுகின்றது. பாருங்கள்! உலகத்தில் எதனைப் பார்த்தாலும் தன் ஆண்ட வனையே நினைக்கின்றார்; எந்த உயிரைக் கண்டாலும் அவற்றினிடத்தே தன் ஐயனைப் பற்றியே பேசுகிறார், பாடுகிறார். இவ்வன்பின் பெருக்கத்தாற் சிற்றறிவுடைய குயிற்பறவையும் தமது நாயகனையே வரும்படி கூவல்வேண்டு மெனக்கேட்டுக் கொள் கின்றார். இங்ஙனம் பேரன்பு நிகழப்பெற்றால் அவ்வன்பிற்கு உரியவரையன்றி வேறொன்றையும் உள்ளம் நாடாதுபோலும்! இவ்வியல்பை நினைக்க நினைக்க என்னால் ஆற்றமுடியாமல் என் நெஞ்சம் கலங்கி நெக்குடைந்தது” என்றேன்.

நீ

இச்சொற்களைக் கேட்டதும் “ஆம், ஆம், அது மெய்தான். திருவாசகத்தின் உருக்கம் வேறெதிலும் இல்லை. 'திருவாசகத்தில் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்' என்னும் பழ மொழி பொய்யல்லவே. ஆனாலும், நீ சிறுபருவமுள்ள குழந்தை யாதலால் இவ்வளவு தூரம் நீ பக்திவசப்பட லாகாது. நல்லது, ஐந்துமணி ஆகப்போகிறது. இன்றைக்கு உன்னைக் கடற்கரைக்கு அழைத்துப் போக விரும்புகின்றேன். கீழே வேலைக்காரனைக் கூப்பிட்டு நமது பெட்டி வண்டியைக் குதிரையிட்டுக் கொண்டுவரச் சொல்” என்று சொல்லி உடுத்திக் கொள்ளப் போனார். கடற்கரைக்குப் போய்வந்த பிறகு உமக்குக் கடிதம் எழுதுகிறேன் என் அன்பார்ந்த முத்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/75&oldid=1582033" இலிருந்து மீள்விக்கப்பட்டது