உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

கடிதம் - 6

அருமையிற்சிறந்த காதலரே,

நேற்று யான் எழுதிய கடிதம் உமக்குக் கிடைத்திருக்கலாம் என்று நம்புகின்றேன்.யான் எழுதியவாறே நேற்று மாலையில் என் மாமனார் என்னைத் திருவல்லிக்கேணியிற் கடற்கரைக்கு அழைத்துக்கொண்டு போனார். இராசதானிக் கலாசாலையின் தென்னண்டையிலுள்ள அகன்ற பாட்டைவழியாக எங்கள் வண்டி சென்றது.சிறிதுநேரமாயினும் ஓய்வின்றி எழுந்து சுருண்டு விழுந்து ஓவென்று முழங்கி அலையும் கடல்நீரின் அருகே இந்தக் கலாசாலையின் அழகிய கட்டிடம் மிகுந்த அமைதியோடும் அசைவின்றி விளங்குதலைக் கண்டதும் என்னுள்ளத்திற் பலவகையான சிந்தனைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. உலகத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் செல்வ வாழ்க்கையானது கடலலைபோல் மாறிமாறிப் போகின்றது; வாழ்வுமாறி மாய்ந்து போகுங் காலத்து அவர்கள் மனம் வருந்தி ஓலமிடுதலைப் போலக் கடலோசையானது மாறாமல் முழங்குகின்றது; கடலின் அலைகளால் அங்குமிங்குமாக அலைக்கப்பட்டு இரைதேடித் திரியும் பலவகை மீன்களைப்போல மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையிற் கிடந்து உழலுகின்றார்கள்; ஆனால், அக்கலா சாலையோ என்றும் மாறாத கல்விச் செல்வத்தைத் தன்னுள்ளே வைத்திருத்தலால் தானும் மாறாமல் நிலைபெற்று விளங்கு கின்றது; உலகவாழ்விற் பற்று இன்றிப் பலதிறப்பட்ட அரிய நூற்பொருள்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் அதன் மாணாக்கர்கள் முனிவர்களைப் போலவுந் தேவர்ளைப் போலவும் பேரின்பக்கடலிற் றோய்ந்தவர் களாய்ப் பெருமை யுற்றுத் தோன்றுகின்றார்கள். ஆ! என்னிளம் பருவத்தில் யான் கல்விச்சாலையிற் கழித்த நல்நாட்கள் அப்போது என் நினைவுக்கு வந்தன. என் அருமைத் தெய்வநாயகம் உம்மோடு கூட அறிவு நூல்களின் அரும் பொருள்களை ஆராய்ந்து படித்துவந்தபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/76&oldid=1582034" இலிருந்து மீள்விக்கப்பட்டது