உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

❖ LDM MLDMOLILD -14 →❖

நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து வந்தோம்! உலக வாழ்க்கையில் நாடோறுங் காணப்பட்டு வரும் வஞ்சனையும் பொறாமையும் சினமும் களவும் கட்குடியும் காமமும் மோசமும் பொய்யும் புனைசுருட்டும் நமது பார்வையிற் சிறிதும் தென்படாதிருந் தனவே. அக்காலத்தில் நமது உள்ளம் பால்போற் பரிசுத்தமா யிருந்த தன்றோ? அப்போது நமக்கு விசனமேது? கவலையேது? நம்மோடு கல்விபயின்ற நம் உடன் மாணாக்கர்களும் நாமும் சிறிதுந் தன்னயங் கருதாமல் ஒருவரை யொருவர் எவ்வளவு அன்பாய் நேசித்து வந்தோம்! அதுவன்றோ உண்மையான நேசம்? இவரால் நமக்கு இன்ன உதவி கிடைக்கும் என்னும் நோக்கத்தோடு உலகத்தார் கொள்ளும் நேசம் உண்மையில் நேசமாகுமா? அது வியாபாரஞ் செய்வதனோடு ஒக்குமன்றோ!” உண்மை யன்பினையும் உண்மை உண்மை யறிவினையும் எங்கே கண்டோம்? கலாசாலையிலன்றோ? நம் உபாத்தியாயர்களும் ஆசிரியர்களும் நம்மிடத்தே எல்லாம் அகமும் முகமும் மலர்ந்து தேனினும்பாலினும் இனிக்கும் இன்சொற்களால் அரிய பெரிய பொருள்களையும் ஒழுக்கங் களையும் எடுத்து நமக்கு விளக்கிக் காட்டியபோது நாமடைந்த மகிழ்ச்சியை இனி வேறெங்கே அடைவோம்? நமக்கிருந்த ஐயங்களை நம் ஆசிரியன் மாரிடத்து எவ்வளவு தாராளமாய்க் கேட்டுத் தெளிந்தோம் இனி நிகழ்வன வற்றை அங்ஙனம் யாரிடத்துக் கேட்டுத் தெளிவோம்! என்று இங்ஙனம் யான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் எங்கள் வண்டியானது இராசதானிக் கலா சாலையின் கீழண்டைச் சாலையில் வந்து நின்றது. உடனே என் மாமனாரும் யானும் வண்டியிலிருந்து இறங்கினோம்.

இறங்கினதும் செம்மண் கப்பியினால் இடித்துச் சமமாக அமைக்கப்பட்ட அகன்ற அக்கடற்கரைச் சாலையின் அழகானது என் கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது; அச்சாலையின் கீழண்டையிலே அச்சாலையினுஞ் சிறிது உயரமாக நெடுக அமைக்கப்பட்டிருக்கும் நடைவழியானது மேற்புறத்து வரம்பில் கருங்கல்லணை வகுக்கப்பட்டுப் பார்ப்பதற்கு மிகவும் இனிதாயிருந்தது; அந்த நடை வழியின்மேல் ஒவ்வோரிடத்து இருப்புக் கால்கள் உள்ள விசிப் பலகைகள் இடப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றின்மேற் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கலாமா? என்று என் மாமனாரை யான் கேட்க அவரும் அதற்கு இசைந்து அங்கே வெறுமையாய் இருந்த ஒன்றின்மேல் என்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/77&oldid=1582035" இலிருந்து மீள்விக்கப்பட்டது