உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

49

அழைத்துக் கொண்டுபோய் உட்கார்ந்தார். 'உட்கார்ந்தபின் யான் மேற்கு முகமாகத் திரும்பி இராசதானிக் கலாசாலைக் கட்டிடத்தையும், அதன் அருகாமையிலுள்ள கலச மாலையும் பார்த்து வியந்து கொண்டிருந்தேன். அன்புள்ள தெய்வநாயகம், நீர் இரண்டு வருஷங்களுக்கு முன் வித்தியார்த்தி பரீட்சையில் தேறி, அதற்கு அடையாளமாகச் சர்வகலா சங்கத்தார் கொடுத்த நிலையங்கி யினை இந்தக் கலசமாலிலேதான் பெற்றுக்கொண்டீர் என்பது அப்போது என் நினைவில் எழுந்தது. வித்தியார்த்திகள் கலைமகளின் திருவருளைப் பெறுதற்குரிய சிறந்த திருவிழாக் கொண்டாடப்படும் இம் மகா மண்டபத்தினை அப்பெருந்தேவி எழுந்தருளியிருக்கும் பரிசுத்த ஆலயமாகவே நினைந்து மனத்தாற் றொழுதேன்.

யாங்கன் சென்றது மாலைக்கால மாதலால் பெட்டி வண்டிகளிலும் சாரட்டு வண்டிகளிலும் ஜட்காவண்டிகளிலும் ஒற்றை மாட்டுவண்டிகளிலும் துவிசக்கர வண்டிகளிலும் ஆண் பெண் என்னும் இருபாலாரும் நடைவழியின் மருங்கேவந்து தொகுதி தொகுதியாக இறங்கினர். அங்ஙனம் வந்து இறங்கினவர் களுள் முதன்முதல் என் கண்ணிற் றென்பட்டவர்கள் ஒரு பாரசிக குடும்பத்தார். இச்சிறு குடும்பத்தில் ஒருவர் ஆண்மகன்; ஒருவர் பெண்மகள்; ஐந்து பிள்ளைகள்; இச்சிறு குடும்பத்தின் தலைவரென்று தோன்றிய அக்கனவானுக்கு ஏறக்குறைய முப்பத்தைந்து வயது இருக்கும்; நீண்டுயர்ந்து சற்றுப் பருத்த உடம்புள்ளவர்; விளிம்பு சுருட்டிய கறுப்புக்குல்லா ஒன்று தலைமேற் கவித்திருந்தார்; கழுத்திலிருந்து முழங்கால் அளவுந் தொங்கும் தளர்வான மேற் சட்டையும் காற்சட்டையும் அணிந்து அடிகளுக்குத் தோற் சப்பாத்து இட்டிருந்தார்; பூவரசின் பழுப்புப் போல் மங்கலான புகர்நிறம் உடையவராயிருந்தாலும் இவரது முகத்தில் மிகவும் அமைதியான தோற்றமும் வசீகரமும் அறிவின் மேன்மையுங் காணப்பட்டன. இவரது மனைவி யென்று தோன்றிய அப்பெருமாட்டியார் ஒப்பற்ற ஒரு தேவமாதரைப் போல் இருந்தனர்; இவருக்கு முப்பது வயதிருக்கும். இலேசாகப் பொன் நிறம் ஊட்டிய ஒரு சலவைக்கல் இருந்தால் அதனை இவ்வம்மையின் உடம்பின் நிறத்திற்கு ஒப்பாகச் சொல்லலாம்; இவர் கணவன் நிறம் மங்கலாயிருப்பதுபோல் இல்லாமல் ப்பெரு மாட்டியின் நிறம் மெருகிட்டதுபோல் மிகவுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/78&oldid=1582036" இலிருந்து மீள்விக்கப்பட்டது