உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

❖LDMMLDMOELD -14❖

தெளிவாய் இருந்தது; இவர் உடுத்தியிருந்த மெல்லிய வழுவழுப்பான நீலப் பட்டாடையானது இவரது அழகிற்கும் உடம்பின் அமைவுக்கும் தக்கதாயிருந்தது, காற்றினால் அவ்வாடையானது அவருடைய அங்கங்களின்மேற் படிந்து தோன்றியபோது அவைகடைந்து திரட்டப்பட்டவை போல் அவ்வளவு திருத்தமாக இருந்தன; அவ்வாடையைத் தலைமேல் அரைமுக்காடாக அணிந்திருந்தனர்; அவரது முகமோ சிறிது அகன்று உருண்டு முழுமதியைப்போல் விளங்கிற்று; தலைமேல் மயிர் இரண்டு கூறாக வகுக்கப்பட்டு நெற்றியின் இருபுறத்தும் நெளி நெளியாக மிகக் கறுத்து ஒழுக அதன் கீழ் அம்முகத்தை நோக்கியக்கால், ஏதோ மழைகாலத்தின் ஒரு நாளிலே ஓடும் ஒரு கரிய மேகத்தின் ஓரத்திலே அருமையாகக் காணப்படும் தெள்ளிய சந்திரனையே அதற்கு ஒப்பாகச் சொல்ல வேண்டுமென எண்ணினேன். ஆ! அவ்வம்மையின் கரிய புருவங்களின் கீழே கறுத்துப் பருத்த விழிகள், சுற்றியுள்ள தன் பிள்ளைகளை நோக்குகையிற் புரண்டு புரண்டு சுழன்ற அழகை என்னென்று கூறுவேன்! அவரது சற்றுப் பெரிய மூக்கானது நுனியிற் சிறிது வளைந்திருந்தாலும் அவ்விழிகளுக்குப் பொருத்தமாயிருந் தமையினாலே பார்வைக்கு மிக இனியதாகவே யிருந்தது; தம் பிள்ளைகளைப் பார்த்து அடிக்கடி அவ்வம்மையார் புன்முறுவல் செய்கையில் அவர் இதழ்களின் அகத்தே சிறிது தோன்றிய பற்களானவை சற்றுத்திறந்த பவழச்செப்பின் வாய்வழியே உள் வைத்த முத்துக்கோவை தோன்றினாற்போல் திகழ்ந்தன. இனி இவ்விருவரினும் அருமையான காட்சியை அவர்தம் பிள்ளை களிடத்துக் கண்டு களிப்புற்றேன். இவர்களின் அருகே நின்ற மூத்தபிள்ளை பன்னிரண்டு வயதுள்ள அழகியபெண்; அதன் முகத்திலே புத்தப்புதிய இளம்பருவப் பேரழகு குடிகொண்டு வயங்கிற்று; தன் தாயின் அழகின் கூறுகளெல்லாம் வடிக்கப்பட் சாரமாய் அதனோடு கட்டிளமைப் புதுமையுங் கலந்து திரண் டெழுந்த உருவமே அப்பெண்பிள்ளையென்று சொல்லலாம்; வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகளுக்கு உடுத்துவதைப் போல் மேற்சட்டையுங் கீழ்ப் பாவாடையுஞ் சேர்த்து அணிந்து இடையில் தங்க ஒட்டியாணம் அப்பிள்ளைக்குப் பூட்டப் பட்டிருந்தது; தலைமேல் அடர்ந்து நீண்ட மயிரானது கரிய பின்னலாகப் பின்னப்பட்டு பின்னே நீளத் தொங்கிற்று; காலில் கரிய மேற்சோடும் அடியில் மெல்லிய சப்பாத்தும் இடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/79&oldid=1582037" இலிருந்து மீள்விக்கப்பட்டது