உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

51

பட்டிருந்தன; இதன் கண்களிற் கள்ளங் கவடில்லாத வெள்ளை நோக்கம் அமைந்திருந்தது. இப்படிப்பட்ட இப்பிள்ளையின் இடது கையின் மேல் அள்ளி ஏந்திய அமிழ்தத்தைப்போல ஓர் அருமையான ஆண் மகவு இருந்தது. அக் குழவியைப் பார்த்து அப்பெண்பிள்ளை புன் சிரிப்புக் கொள்கையில் அவ்விரண்டின் தெளிவான கன்னங்களிலும் குழிவிழுவது பார்க்கப் பார்க்க ஆசையை விளைத்தது. கைக் குழந்தைக்கு ஒரு வயதிருக்கலாம். கீழ்நின்ற மற்ற மூன்று குழந்தைகளும் அருமையான ஆண் பிள்ளைகள். அப்பிள்ளைகள் மூன்றுக்குங் கழுத்திலிருந்து முழங்கால் வரையில் சட்டைகள் இடப்பட்டிருந்தன; அவற்றின் தலைமேல் உள்ள மயிர் முழுதும் இரண்டங்குல நீளம் வைத்து நறுக்கிவிடப்பட்டிருந்தது; அம்மூன்றும் வானத்திலிருந்து வழுக்கிவீழ்ந்த வான்மீன்களையே ஒத்திருந்தன; அவற்றின் தூய கொவ்வைச் செவ்வாயினைப் பார்க்குந்தோறும் அம்மகவுகளை முத்தம் இடவேண்டுமென்னும் அவா அடங்காமல் எழுந்தது. அவற்றில் இரண்டு பிள்ளைகள் தந்தையின் டது கை விரலையும் வலதுகை விரலையும் பிடித்துக் கொண்டு உள்ளக் கிளர்ச்சியோடுந் தம் சிற்றடிகளை எடுத்து வைத்துக் குறுகுறு வென்று நடந்தன; மற்றொருபிள்ளை அங்ஙனமே தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தது. ஆ! இச்சிறு குடும்பத்தார் அத்தனைபேர் முகத்திலுந் ததும்பிய மகிழ்ச்சியைப் பார்த்த போது இவர்கள் பேரின்பத்தில் வசிக்குந் தேவர்கள் தாமோ என்று ஐயுற்றேன்; துன்பங் கவலை முதலியவற்றை இவர்கள் தினைத்துணையேனும் அனுபவித்தவர்களாகத் தெரியவில்லை. இத்துணை அருமையான குழந்தைகளைப் பெற்றுப் பேரின்பத்தை அனுபவிக்கும் இவர்களினுந் தேவர்கள் சிறந்தவரோ என்றும் நினைத்தேன். பரிசுத்த இயல்புடையவரான குழந்தைகளைத் தம்மிடத்... துடையவர்கள் தாமும் பரிசுத்தமானவர்களாகவே இருக்க வேண்டும். “தக்கார் தகவிலரென்பது அவரவர், எச்சத்தாற் காணப் படும்” என்ற பொய்யாமொழி என்றும் பொய்யா மொழியாகவே விளங்குதலை இங்கே தெளிந்துகொண்டேன். இத்தன்மையவான குழந்தைகள் உள்ள இடத்திலே அன்புருவான இ சிவம் விளங்கிக் கொண்டிருக்கும் என்பது திண்ணம். இத்தகைய குழவிகளைப் பெறாதவர்க்கு இவ்வுலக வாழ்வினாற் சிறிதும் பயனில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/80&oldid=1582038" இலிருந்து மீள்விக்கப்பட்டது