உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் -14

“பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற் றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களை இங் கில்லா தவர்”

என்னும் புகழேந்தி வாக்கு முற்றும் உண்மையே.

இச்சிறு குடும்பத்தார் நாங்கள் இருந்த இடத்திற்குக் கொஞ்ச தூரத்தில் வண்டியைவிட்டு இறங்கினர். அவர்கள் வண்டியை விட்டு இறங்கினது முதல் யான் அவர்களைப் பார்த்த வண்ணமாகவே இருந்தேன். அவர்களும் நாங்கள் இருந்த பக்கமாய் நடந்து வருகையில் அப்பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் அவர்களின் மூத்த பெண்ணும் என்னைச் சுட்டிப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே வந்தார்கள்; அவர்கள் எங்கள் அருகாமையில் வந்ததும் என்னோடும் என் மாமனாரோடும் பேசவிரும்பினார்க ளென்பதை அவர்கள் முகக்குறிப்பினால் அறிந்தேன்; ஆனால் எங்களை முன்பின் அறியாதவர்களாய் இருந்தமையால் அவ்வாறு சடுதியில் எங்களோடு பேசுவதைப் பற்றி நாங்கள் வேறுவகையாய் நினைக்கப் போகிறோம் என்று அஞ்சி, நடுவே கடற்கரையோரத் திற்குத் திரும்பும் பாதைவழியே மெல்லச் சென்றார்கள். என் மாமனார் அச்சிறு குடும்பத்தாரைப் பார்த்தது முதல் “என்ன அருமை! என்ன அருமை! அம்மா, அந்தப் பாரசிக கனவானையும் அவர் மனைவியாரையும் அவர்கள் குழந்தைகளையும் பார்க்கப் பார்க்க எவ்வளவு ஆனந்தமாயிருக் கின்றது! இவர்களோடு பேச வேண்டுமென்னும் ஆசை எனக்கு அதிகமாயுண்டாகிறது. அவர்கள் கடற்கரை ஓரத்திற் போய் இருக்கட்டும்; கொஞ்ச நேரங்கழித்து நாமும் அங்கே போகலாம். அந்தக் குழந்தைகள் விளையாடிக் டிருப்பதைப் பார்த்தாலும் போதும்” என்று அவர் என்னைப் பார்த்துச் சொல்லியதைக் கேட்டு எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

காண்

பின்னுஞ் சிறிது நேரத்திற்கெல்லாம் மாமனாரும் யானும் கடற்கரை ஓரத்திற்குச் சென்றோம். சென்று, அலைநீர் வந்து வந்து திரும்பும் அவ்விடத்திற்குக் கிட்ட மணலின் மேல் உட்கார்ந்து

காண்டு, எங்களுக்கு முப்பது அடி தூரத்தில் வந்திருந்த அப்பாரசிக குடும்பத்தாரைப் பார்த்தபடியே யிருந்தோம். எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/81&oldid=1582039" இலிருந்து மீள்விக்கப்பட்டது