உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

என்

மறைமலையம் -14

பாஷையில் ஏதோ ஒரு சொல்லை சொல்லிக் கொண்டு ஓடிவந்து கழுத்தைக் கட்டிக் கொண்டது; யானும் அதனாற் பெருமகிழ்ச்சி அடைந்து அதனை அணைத்து முத்தமிட்டு மடிமீது வைத்துக் கொண்டேன். இந்தக் குழந்தை என் மடிமீது வந்து இருத்தலைக் கண்டவுடனே மூத்த பெண்ணும் மற்ற இரண்டு குழந்தைகளும் என் எதிரே வந்தனர்; மூத்த பெண்ணுடன் வந்த இரண்டு பிள்ளைகளிற் பெரியபிள்ளை மாத்திரம் என் கிட்ட வந்ததும் சிறிது விலகியிருந்தது; மற்றொரு பிள்ளையோ அருகில் வந்து என்னைப் பார்த்ததும் என் மடியிலிருக்கும் குழந்தையைப் போலவே நெருங்கி வந்து என் வலதுகையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டது; பெரிய பெண்பிள்ளையும் பெரிய பையனும் மாத்திரம் என்னை உற்றுப் பார்த்தபடியே புன்சிரிப்போடு நின்றனர். இப்பிள்ளைகள் எல்லாம் இவ்வாறு என்னிடத்தில் அன்பு பாராட்டுவதற்கு ஏதோ அர்த்தம் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். எதிரில் நின்ற பெரிய பெண் சில நிமிஷங்களுக்குப் பிறகு தங்கள் பாஷையில் ஏதோ சொல்லி என் மடிமீதிருந்த குழந்தையை அழைத்தது. ஆனால், அக்குழந்தையோ என்னைவிட்டு போக மனம் இல்லாமல் தலையை அசைத்து, என்னை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டது. நானும் அவ்வளவு அன்போடுள்ள அக்குழந்தையை விடுவதற்கு மனம் இல்லேனாய், அம் மூத்த பெண்ணை நோக்கி அதற்கு நமது தமிழ்ச் சொல் தெரியாதென்று எண்ணி அக்குழந்தை சிறிது நேரம் என்னிடமே இருக்கட்டும் என்பதைச் சைகையாற் காட்டினேன். ஆனால், அம்மூத்த பெண்ணோ தமிழிலேயே எங்க அக்காளாக்கு மென்று அந்தப்புள்ளை உங்களிக்கிட்டையேயிருக்கு என்று துலுக்கர் தமிழ்ப் பேசுகிற மாதிரியாகப் பேசிற்று. உடனே நான் அப்படியானால் நீங்கள் எல்லோரும் என் பக்கத்திலே உட்காருங்கள் என்று சொன்னேன். அதனைக் கேட்டு அந்த மூத்தப் பெண்ணும் பையனும் என் பக்கத்தே உட்கார்ந்தார்கள். எங்களுக்குள் நடந்த இவைகளையெல்லாம் சிறிது தூரத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் பெற்றோரான அப்பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் தம் பிள்ளைகள் என்னிடத்தில் மகிழ்வோடு பேசிக்கொண்டு என்னிடத்தும் என்னருகிலும் உட்கார்ந்திருத்தலைக் கண்டு அதென்னவென்று விசாரித்ததற்கு எம்மிடம் எழுந்து வந்தார்கள். எங்கள் அருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/83&oldid=1582041" இலிருந்து மீள்விக்கப்பட்டது