உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

-

95

புறம்பே - வெளியே; மனவெழுச்சி உள்ளக்கிளர்ச்சி; அடர்ந்த - நெருங்கின; 'தோப்பு' என்பது ஒரேவகையான பெரியமரங்கள் அடர்ந்திருப்பது; கூட்டம் எனப் பொருள்படும்; ‘தொகுப்பு' எனுஞ் சொல் தோப்பு என்று ஆயிற்று; வெட்டவெளி - நடுவே மறைப்பாக ஏதொரு பொருளும் இன்றி வெறும்பரப்பா யிருப்பது; 'வெட்ட, வெளி' என்னும் இரண்டு சொற்களும் வெள்’ என்னும் மதனிலையிற் பிறந்தனவாகும்; கான்யாறு காட்டாறு. ஆண்டு ஆண்டு அவ்வவ்விடத்தே; 'முருடு' என்னுஞ் சொல் இக் காலத்தே ; முரடு' என வழங்கு கின்றது; வேனிற் காலம் வெயிற்காலம், அது சித்திரைமுதல் ஆடித் திங்கள் ஈறாகநிகழ்வது. அகழ்ந்த - தோண்டிய.

-

பூட்டை - இராட்டினம்; பயக்கும் உண்டாக்கும், ஆர்உயிர்உடம்பில் நிறைந்த உயிர்; அரிய உயிர் எனலும் ஆம். பறவைகள். ‘நாகணவாய்ப்பறவை' இக்காலத்தார் 'நாரத்தம்பிள்ளை' எனவும் மைனா' எனவுங் கூறுவர்.

புட்கள்

-

தொகுதி

-

கூட்டம், நாயுருவிப் பூண்டின் வேர் பல் துலக்குவதற்கு மிகவும் ஏற்றதென்பர். திரளெ

-

-

திரண்ட

பொருள். பொதிந்து திணிந்து: உள்ளடக்கி; ‘அறிவுறுத்தல்’ அறிவிற்பதித்தல்.

உலக இயற்கையிலுள்ள நலங்ளை முதலிற் கண்ணி னாற்கண்டு பிறகு அறிவினால் எண்ணிப் பாராட்டல் வேண்டும். கண்ணினாற் காண்பதற்கோ பகலவனது ஒளி கட்டாயம் வேண்டியிருக்கின்றது. ஒளியைத் தருவதோடு, நிலத்தின்கண் உள்ள புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், மக்கள் என்னும் எல்லா உயிர்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் அழகிய நிறங் களுக்கும் அப்பகலவன் வெளிச்சமே ஏதுவாயிருக்கின்றது. எனவே, உலகத்தின்கட் காணப்படும் எல்லா நலங்களும் ஞாயிற்றிலிருந்தே உண்டாகின்றன. ஆதலால் அகன்று எல்லையறியப்படாத உலகின் நலங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே ஒருகாலத்து உணரமாட்டாத சிற்றறிவினராய மக்கள், ஒருகாலத்து ஒருங்கு காணப்படும் ஞாயிற்றினைக் கண்ட வளவானே அதன் கண்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/120&oldid=1583548" இலிருந்து மீள்விக்கப்பட்டது