உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் 16

6

அவ்வெல்லா நலங்களையும் எளிதில் உணரப் பெறுகின்றனர். இவ்வுண்மையினைத் தெரிக்கும் பொருட்டே ஞாயிற்றினுக்கு ஒரு பொற்குடத்தை உவமையாக்கி, உலக வியற்கையின் நலங்களை உரைத்தார்.

அக்குடத்தினுட் பெய்த

பண்டங்களாக்கி

கவிந்து - மூடி. மழுக்கி - மங்கச் செய்து. கண்ணறிவு நிகழப் பெறாதார்க்கு மனவறிவு மிகக் குறுகுதல் குருடர் மாட்டுக் கண்டு கொள்க. இருள் மிக விரிந்த பரப்பு உடையதாயினும், ஓரிடத்துச் சிறிதாய்த் தோன்றும் ஒரு விளக்கொளியால் அது மறைந்தொழிதலுக்கு, அறிவொளியால் மன இருள் மாய்தலை உவமை காட்டினார். இருள் கருநிறத்ததாகலின் அதனைப் போக்கும் ஞாயிற்றினை வெண்ணிறக் கதிர்களென்னுந் தீம்பால் பெய்த ஒரு பொற்குடமாக உருவகப்படுத்தினார்; மேலும், அப்பொற்குடம், இந்நில வுலகத்துப் பொற்குடம்போல் தன்னுள் பெய்ததனை மறைக்கும் இயல்பிற் றன்றி, மற்றுப் பளிங்குக் குடம் போற் றன்னுட் பொதிந்ததனை வெளியே தெளிவுறக் காட்டும் இயல்பிற்றோன்றும், நாற்புறத்தும் பாயும் அதன் வெள்ளிய கதிர்கள் அக்குடத்தின் எப்பக்கத்துந் தோன்றும் பாலொளியி னொழுக்குப் போல்வனவா மென்றுங் குறிப்பிட்டார். அங்ஙனம் பாயுங் கதிர்கள் நீண்ட கம்பி வடிவத்தானும் இருளைச் சிதைக்குந் தொழிலானும், யானை, கல்யானை முதலிய விலங்கினங்கள் மேற் பாயும் அம்புகள் போறலின், பின்னர் அவற்றைக் கணைகளாகவும் உருவகப் படுத்தினார். அதன்பிற், புறத்தே தோன்றும் ஞாயிறு புறத்திருளை நீக்கிக் கண்ணைவிளக்கி, அம்முகத்தால் அகத்தே பரவிய இருளையும் போக்கி மனவறிவை விளக்குதல் குறித்தார். எல்லைகாணப்படுஞ் சிறுவடிவிற் றாகிய ஞாயிறே புறவிருள் அகவிருள் இரண்டையும் போக்கிப், புறக்கண் அகக்கண் ரண்டையும் விளக்கவல்லதாயின், எல்லை காணப்படாத றைவனது அருளொளி நம் உள்ளத்தில் எழுங்கால் அஃது அங்குள்ள அ அறியாமையை முற்றும் நீக்கு மென்பதுங் காட்டினார்.

அமிழ்தம்-பால். கதிர்கள் - ஒளிக்கம்பிகள். கணைகள் -

அம்புகள். கட்புலன் - கண் அறிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/121&oldid=1583549" இலிருந்து மீள்விக்கப்பட்டது