உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

  • சிந்தனைக் கட்டுரைகள் *

-

97

வியத்தகும் பாரட்டத்தகும். அளப்பு அரிது - அளந்து சொல்லுதல் அரிது. சூறை - சுழல்காற்று. திரிபு நிலைமாறல். இயக்கம் - நடமாட்டம். மக்கள் வாழ்க்கையின் நிலையாமைக்கு வான் நிழலும், உயிர் உடம்பில் உயரத்தில் உலவும் வானம் ஓயாமற் காற்றால் உந்தப்பட்டு ஓடிக்கொண்டே யிருத்தலின், கீழே நிலத்தின் மேற் படும் அதன் நிழலும் ஓரிடத்தும் நிலைபெறாமல் ஓடிக்கொண்டேயிருக் கின்றது. அதுபோலவே மக்கள் வாழ்க்கையும் நிலை பெறாமல் விரைந்து சென்று மறைந்து போகின்றது. இனி, நேற்றுக் கண்ட கனவு கண்ட அப்பொழுதே மறைந்து போதல் போலவும், அது திரும்பத்தோன்றி இன்று காணும் கனவொடு தொடர்பு பட்டு நிகழாமை போலவும், ஒரு நேரத்தில் ஓருடம்பில் நின்ற உயிர், நின்ற அந் நேரத்திலேயே அதனை விட்டுப் போதலுந், திரும்ப அதன் கண் வந்து புகுந்து தொடர்புற நில்லாமையும் கண்டு கொள்க; இப்பகுதி முதல் நூலிலிருந்தே மொழி பெயர்த்

துரைக்கப்பட்டதாகும்.

ஆவது வரிமுதல் அடிசன் எழுதிய கட்டுரை நேரே மொழி பெயர்த்துரைக்கப்படுகின்றது. மலைக்குவடு - மலையுச்சி. ஆடை போர்வை. நண்பகல் - நடுப்பகல், 'நள்' என்பது நண் எனத் திரிந்தது. இளமரக்கா - முற்றா மரங்கள் உள்ள சோலை. வேய் - மூங்கில். சிலிர் சிலிர்ப்பு மயிர்க்கூச் செறிதல்; புல்லாங்குழல் இசை கேட்கும் இன்பத்தால் மயிர் சிலிர்க்கும். கன்னற்பாகு - கரும்பின் சாறு. இம்மைப்பிறவி - இப்போதுள்ள பிறப்பு. நுகருதல் உண்ணல். துறக்கம் - மேல் உள்ள இன்ப உலகம். துய்த்த - நுகர்ந்த. அரம்பைமாதர் - துறக்கவுலகத்தில் உள்ள அழகிய மாதர். எழில் அழகு.

-

வி

-

இசைக் கருவிகளான : யாழ் குழல் தாளம் முழவு முதலியன. தீவிய இனிய, இப்பிறவியிலிருந்த காலத்து நல்வினை தீவினைகளைச் செய்தோர், இவ் வுடம்பை வ்வு விட்டபின்னும் ஆவி வடிவில் இந்நில வுலகத்திற் கருகே இயங்குதலுண்டு. இது ‘மரணத்தின் பின் மனிதர் நிலை’ என்னும் நூலிற் கண்டு கொள்க. உரையாடினால் - பேசினால். இசைத்த - ஒலிப்பித்த, முறுவலித்து - புன்சிரிப்புகொண்டு. நல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/122&oldid=1583550" இலிருந்து மீள்விக்கப்பட்டது