உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 16

உரை - நற்சொல்; கூறி - சொல்லி. வெருட்டி வெருளச் செய்து, துரத்தி.

-

மலைகளின்

கீழ்ப்பால் - கிழக்குத்திசை. பள்ளத்தாக்கு இடையே அமைந்திருக்குங் குழிந்த நிலம். ஒழுகுவது ஓடுவது. மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை அப்பள்ளத்தாக்கிற் காணப்படும் காட்சிகளோடு பொருந்த வைத்துக் காட்டுகின்றார். துன்பவேலி - துன்பங்களுக்கு இருப்பிடம். மக்கள் வாழ்க்கையில் ருந்துன்பங்கள் ஒரு பெரும்பள்ளத்தாக்காகவும், அத்துன்பங்கள் எல்லாம் நேற்று இன்று நாளை என்னுங் கால ஓட்டத்தைப்பற்றி நிகழ்தலின் அக்கால ஓட்டம் அப்பள்ளத் தாக்கினூடு சுருண்டு ஓடும் ஒரு நீர்ப்பெருக்காகவும், உலகத்தின் தொடக்கமும் அதன் முடிவும் எவரானும் அறியப்படாமையின், அவ்விரண்டும் அந்நீர்ப் பெருக்கில் இருண்டு இடையே தோன்றிய நம்மக்கட் பிறவியின் வாழ்நாள் அந்நீர்ப் பெருக்கின் நடுவே காணப்படும் ஒரு பாலமாகவும், மக்கள் வாழ்க்கைக்கு வரையறுக்கப்பட்ட நூறு ஆண்டுகளும் அப் பாலத்தில் அமைந்த நூறு கண் களாகவும், அவரவர் தந் தகாச் செயல்களால் நூறாண்டு நிறைதற்கு முன் எழுபதாண்டுக்குள் இறந்து போதலின், மற்றை முப்பதாண்டுகளும் அப்பாலத்தில் உடைந்துபோன கண் களாகவும் உருவகப்படுத்திச் சொல்லப்பட்டன. திணிந்த நெருங்கிய. ஏது - இயைபு, காரணம் : ‘ஏதிலார்' என்னும் பழைய தமிழ்ச் சொல் ‘இயைபு இல்லார்' எனப் பொருள் தருதலின் இதனை வடசொல் லென்றல் பொருந்தாது; ஏது என்னுந் தமிழ்ச் சொல்லே 'ஹேது' எனத் திரித்து வடநூலா ரால் வழங்கப்பட்டது.வினவினேன் - கேட்டேன். வரையறுக்கப் படும் - எல்லை கட்டப்படும்: பகுதி - பங்கு. 'வாணாள்’ வாழ்நாள் நோக்குதல் உன்னிப்பாய் பார்த்தல். நுறுங்குதல் நொறுங்குதல்; பொடி படுதல். மொத்தம் - தொகை.

-

-

-

றைவன் முதன்முதல் மக்களைப் படைத்த காலையில் அவர்க்கு ஆயிரம் ஆண்டு வாழ்நாள் அமைத்தானென்பது விவிலிய நூல் வழக்கு. வாழ்நாள் என்கின்ற பாலத்தின் இடையிடையே பொருத்தப்பட்ட கள்ளக் கதவுகளாக உருவகப் படுத்தப்பட்டவை, மக்கள் தம் பொருந்தாச் செயல்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/123&oldid=1583555" இலிருந்து மீள்விக்கப்பட்டது