உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

99

வருவித்துக் கொள்ளும் நோய்களேயாகும். காலம் முதிரா முன்னரே இறந்தொழிவதற்கு இந்நோய்களே ஏதுவாக இருத்தலால், மக்கள் சடுதியிற் றவறிக்கீழே வெள்ளத்தில் வீழ்தற்கு வாயிலாய் அப்பாலத்தில் அமைக்கப் பட்ட கள்ளக்கதவுகளாக இவை தம்மை இவை தம்மை உருவகப்படுத்தினார். அப்பாலத்தின் முதன் முனையில் தொங்குங் கரிய வானம் வாழ்நாள் துவக்கத்திற்கு ஓர் அடையாளமாகலின், அதனைக் குழந்தைப் பொழுதிலே யணுகிய மக்கள், தாய் தந்தையர் வழிவந்த பல்வகை நோய்களாற் பற்றப்பட்டு இறந்தொழி தலைத் தெரித்தற் பொருட்டு அங்கே அக் கள்ளப்படுகுழிகள் பற்பல உள என்றார். நுழைவாயில் உட்புகும் இடம். பாலத்தின் நடு வென்றது மக்கள் வாழ்நாளின் நடுப்பகுதி. அது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து ஆண்டு வரை யிலுள்ள காலம்; அக்காலத்திற் பெரும்பாலார் இறந்து படுதலின், அவ்விடத்திற் செல்லச் செல்ல மக்களின் தொகை சுருங்கி விட்டதென்றார்.

-

அப்பாலத்திற் பழுதுபடாதிருந்த கண்கள் என்றன, நோயில்லாத இளமைக்காலமேயாம்: அக் காலத்தில் மக்கள் தொகை பெருகியிருத்தலின் முழுமையாயிருந்த கண்களின் மேல் அவரது தொகை மிகுந்த தென்றார்.

-

பழுதுபட்ட கண்களென்றன நோயாற் பற்றப்பட்ட காலங்கள்; அக்காலங்களிற் சிறிது உயிர் பிழைத்திருந்தோரும் நாட் செல்லச் செல்ல இறந்து பட்டமை அறிவித்தார்.தெற்றுப் பட்டு தடைப்பட்டு. நீர்க்குமிழிகள் என்றன பல்வகைச் சிற்றின்பங்கள். கொடுவாளும் அரிவாளும் ஏந்தி நின்று, வழிவந் தோரை அப்படுகுழிகளிற் புகுத்தி வீழ்த்தினோர், களவு, கட்குடி, சூது, ஊனுணா, விலைமாதர்.

இத்துணை - இவ்வளவு. எருவை- கருடன், பருந்திலொரு வகை. ஆடவன் -ஆண்மகன். கூற்றுவன் - உயிரை உடலினின்றுங் கூறுபடுத்தும் ஒரு தெய்வம்.

தருதல் மாலைத்து - தருதலை இயல்பாக உடையது. தன் நிறைவு. ஒருமிக்கும்

அகத்தே

-

தன்னுள்ளே. செறிவு

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/124&oldid=1583560" இலிருந்து மீள்விக்கப்பட்டது