உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 16

-

-

ஒன்றுகூடும். குழாம் - கூட்டம். சேய்மை - தூரம். படுகர் . பள்ளம். புயல் - மேகம். செறிந்து - நெருங்கி. குடா - வளைந்த நீர்நிலை. இடை ஒழுகும் - நடுவேயோடும். நறு - நல்ல மணம். தளிமம் - படுக்கை.

-

ஆர்ப்பு - ஒலி; விரகிய - கலந்த, துளும்புதல் வழியும்படி நிறைதல். வாயிலாக வழியாக. புத்தம் புதிய மிகப் புதிய. எக்கர் -குவிக்கப்பட்ட மணல்மேடு. அறம் வழுவாது - தருமத்தினின்றுந் தவறாது. உறையுள் - தங்கும் இடம். ஏற்றம் - மேன்மை; இணங்க - இசைய; பல திறப்பட்ட பலவகைப் பட்ட வசதி - இடத்தின் நன்மை, விடுதி - தங்குமிடம்; பெறற்பாலன - பெறு தற்கு உரியன; இப்பெற்றித்து - இத்தன்மைத்து.

-

-

கடியல் - கடிதல், நீக்கல். உரைவரம்பு - சொல்லின் அளவு. உவந்து மகிழ்ந்து, ஆன்நிரை - பசுக்கூட்டம். கவன்று - கவலை யுற்று. நிகழ்ந்தன - நடந்தவை, அளவளாய் அளவளாவிக் கொண்டு.

-

2. படைப்பின் வியத்தகு தோற்றங்கள்

அடிசனார் இயற்றிய இவ்வாங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு பதினேழாம் பக்கத்தின் முதலிலிருந்து வருகின்றது. அதற்குமுன் இதன் மொழிபெயர்ப் பாசிரிய ராகிய மறைமலையடிகள் தாம் திருவனந்தபுரஞ் சென்றமையினையும், அங்கே காணப்பட்ட நிலத் தோற்றங்களின் அழகினையும் எடுத்துக் கூறுகின்றார்.

-

கழகம் கல்விபயிலும் இடம்; அறிவுநூல் - தத்துவ சாஸ்திரம் (Philosophy). அப்போது திருவனந்தை அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராய் அமர்ந்திருந்தவர் திருச்சுந்தரம் பிள்ளையவர்களே யாவர். உவந்து - விரும்பி. ஆக்கம் பெருக்கம். பெற்றி - தன்மை. புறம்பே - வெளியே. சேய்மை - தொலைவு, பொற்றை மலை - மண்மேடாயிருக்கும் மலை. ‘குறிஞ்சி நிலம்' என்பது மலையும் மலையடுத்த இடமும் ஆகும். விருந்து ஓம்பல் விருந்தினராய் வருவாரைப் பேணல். ஒருகிழமை ஒரு வாரம்.

-

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/125&oldid=1583564" இலிருந்து மீள்விக்கப்பட்டது