உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

-

மறைமலையம் 16

கழிப்பு கழித்து. அருகாமை

நோக்கினேற்கு

-

அண்மை, அருகு.

நோக்கின எனக்கு; எனக்கு; இவ்வரி யிலிருந்து அடிசனாரது கட்டுரை மொழிபெயர்த் துரைக்கப்படுதல் காண்க.சுடர்க்கொழுந்து ஒளியின் கொடி; திகழும் - விளங்கும். நிறத்தோய்ச்சல் நிறங்கள் ஒன்றோடொன்று கலந்து காணப்படல். கச : செக்கர்வானம் - செவ்வானம். வான்மீன்கள்

-

-

-

நட்சத்திரங்கள்; கோள்கள் - கிரகங்கள். கதிர் - ஒளிக்கம்பி. திணிந்து - நெருங்கி. மீன் தொகுதிகள் - நட்சத்திரக் கூட்டங்கள், மின்னுதலின் அவை ‘மீன்' எனப் பெயர் பெற்றன; நீர்வாழ் உயிர்களில் ஒரு சாரனவும் மின்னுதல் பற்றியே மீன் எனப்பட்டன; இத்தமிழ்ச் சொல்லே வடமொழியிற் சென்று ‘மீனம்' என வழங்குகின்றது. நளி அமிழ்தம் - குளிர்ந்த பால். முழுமதியம் - முழுநிலா. முகிற் குழாம் - மேகக் கூட்டம். ஞாயிறு சூரியன். பிழம்பு - திரட்சி; ஊடே - நடுவே. நேர்த்தி - திருத்த முள்ளது; தோய்வித்து கலப்பித்து. வனைத்தான அழகாய்ச் சய்த.

செல்லல். சான்றோர்

-

-

-

-

-

ஓவியம். சித்திரப்படம். துலங்க விளங்க. இயங்குதல் அறிவானும் நல்லியல்புகளானும் நிறைந்து அமைந்தோர். இடர்ப் படுத்துவதான - துன்புறுத்து கின்ற. தொல்லாசிரியர் - பழைய ஆசிரியர்; இங்கே தொல்லா சிரியரென்று அடிசனாற் குறிப்பிடப் பட்டவர் 'டேவிட்' (David) என்பவரேயாவர்; டேவிட் என்பவர் கூறிய கருத்துக்களை மறைமலையடிகள் இங்கே தமிழ்ச்செய்யு ளாக்கினார்; அச் செய்யுளின் பொழிப்புரை வருமாறு : வானமும், வானத்தில் விளங்கும் நிலவும், வான் மீன்களும், ஓ கடவுளே, நின் கைவிரல் களின் வினையால் ஆக்கப்பட்டன வாகுமென்று ஆராய்ந்து பார்க்குங்கால், இவ்வுலகத்தில் இயங்கும் ஆண்மகனும், அவன் பெற்ற தேன்போற் றித்திக்கும் மழலைச்சொற் பேசுஞ் சிறு பிள்ளைகளும் ஒருபொருளாக விளங்குவரோ! 'இவ்’ என்னுஞ் சுட்டு நீண்டு வகரங்கெட்டு னகரச்சாரியை பெற்று ‘ஈன்’ என நின்று இவ்வுலகம் எனப் பொருள் தந்தது; இச்சொல் இப்பொருட்டாதல் "ஈனோர்க் கெல்லாம் இடர்கெட இயன்றது” என்புழியுங் காண்க. உரையிட்டார் - சொன்னார். நங்கட்புலனுக்கு முத்துக்கள்போற் றோன்றுகின்ற வான்மீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/127&oldid=1583574" இலிருந்து மீள்விக்கப்பட்டது