உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 16

முழுமுதற் பொருளாயிருந்துங் குறைபாடு மிகுதியுமுள்ள மக்கள் தமக்குள்ள அக்குறைபாட்டினைக் கடவுளுக்கும் வுளுக்கும் ஏற்றிச் சால்வது வழக்கமாயிருக்கின்ற தென்று உள்ளபடியாகவே எண்ணிப்பார்க்க வல்லதன்று; அதற்கும் ஒரு குறை பாட்டை ஏற்றி வைத்தால்தான் அதனை அது கருத வல்லதாகின்றது. ஒருவன் தன் பகைவனோடு எதிர்த்துப் போராடி அவனை வெல்லல் வேண்டினனாயின், அதற்குக் கருவியாக வேல் வாள் கத்தி பரிசை முதலான படைக்கலங்களை ஏந்திச் செல்கின்றான்; அவனுக்கு அக் கருவிகளின்றிப் போராடமாட்டாக் குறைபாடு உண்மையால், அவன் தான் வழிபடுகடவுளரான முருகப்பிரான், சிவபிரான் என்பவரும் வேலும் முத்தலை வேலும் ஏந்திப் போர் புரிபவராகவே வைத்து வழிபாடு ஆற்றுகின்றான். வேலும் வாளும் இல்லாமற் கடவுள் தான் நினைந்தவளவானே எவற்றையும் அழிக்கவும், அழித்தவற்றைப் பின் ஆக்கவும் வல்லவ னென்று அறிந்திருந்தும், எம்மனோர் அவனை அந்நிலையில் வைத்து வழிபடுகின்றிலர்; இஃது எம்மனோர்க்குள்ள குறை பாட்டினால் ஆயதொன்றாம். இங்ஙனமே ஒவ்வொரு நாட்டிலுள்ளாருந் தத்தமக்குள்ள குறை பாட்டினியல்புக்கு ஒப்பவே கடவுளைப் பலதிறப்பட்ட இழிவான வடிவங்களில் வைத்து வணங்குதல் காண்க. மனச்சாய்வு - அறிவுக்கு ஏலாத தொன்றனிடத்தே மனம்பற்றி நிற்றல். மீண்டும் - திரும்பவும்; முற்ற - முழுதும். ஊடுருவி - வியாபித்து; இடையறாது - நடுவே ஓயாது. இழுக்கு தாழ்வு, தவறு.

-

-

ஓருங்கால்-ஆராயுங்கால்; கடவுளுக்கு உலகம் முழுதும் ஓருடம்பாகலின் 'இவ்வுலகவுடம்பு' என்றார். களை கண் ஆதரவு: இயக்காநிற்கின்றமை - நடத்துகின்றமை; புலன் ஆம் - அறிவுக்குத் தோன்றும், விளங்கும் அறிவுடைய என்றும் வடநூலார் கூறுவர்; அறிவுடையன, ஓரறிவுடைய புன்முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறான உயிர்கள்; அறிவில்லன மண், புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களும் அவற்றின் கலப்பாலான இவ்வுலகங்களுமாம். ஒருமித்து ஒன்றுகூடி. பெயர்தல் - ஓரிடத்தைவிட்டுப் பிறிதோரிடத்திற்குச் செல்லல். பரம்பி - பரவி; ஒருபகுதி ஒருகூறு. வரம்பில் ஆற்றல் - எல்லை யில்லாத வல்லமை : கடவுள் ஓரிடத்தில் ஒருகாலத்திலி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/129&oldid=1583583" இலிருந்து மீள்விக்கப்பட்டது