உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

106

மறைமலையம் 16

டுத்து மொழிந்தனராயினுங் காரைக்காலம்மையாரது கருத்தும் அவரது கருத்தைப் போலவே இருத்தலின் தமிழுக்கு ஏற்க அம்மையாரது திருப்பாட்டை மொழிபெயர்ப்பாசிரியர் இங்கே குறிப்பாராயினர். அப்பாட்டின் பொழிப்புரை வருமாறு பருமானே, தேவரீர் என்னை நுமக்கு அடிமையாகக் கொண்ட அந் நாளிலும் நுமது திருவுருவத்தைக் காணப் பெறாமலே நுமக்கு அடிமைப்பட்டேன்; அடிமைப்பட்டு நுமக்கு அணியளாய் நிற்கும் இந்நாளிலும் நுமது திருவுருவத்தைக் கண்ணாற் காணமாட்டாதேன் ஆயினேன்; எந்நாளி லாயினும் எவரேனும் என்னைத் தலைப்பட்டு ‘நும்' பெருமான் உவ்வகையான உருவம் உடையன்?” என்று வினவினராயின் அவர்க்கு யாது விடை சொல்வேன்! ஆதலால் நினது திருவுருவம் எவ்வுருவினது? அஃது யாது? அதனைக் கூறுவாயாக என்றபடி; இதன் கருத்து என்னையென்றாற், கடவுள் எங்கும் நிறைந்த பொருளாகலின் அதனை ஓரிடத்தில் ஒருவடிவிற் காண்டல் இயலாதென்பதாம்; "எந்தையார் அவர் எவ்வகை யார்கொலோ” எனவும், “இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக்காட்டொணாதே எனவும் போந்த திருமொழிகளும் இக்கருத்துப்பற்றியே எழுந்தனவாம் என்பது. பணி தொழில், இறைவன் செய்யுந் தாழிர்களாவன: படைத்தல், காத்தல், அழித்தல் என்பன. குழைந்து உருகி; விளம்பினார் சொன்னார்.

-

-

-

ஒருதலை - உறுதி. பயவா - கொடாத. குறியாது கருதாது. திருவுளம்பற்றல் - உள்ளத்தில் அருளோடும் நினைத்தல். இச் சொற்றொடர், கடவுளிடத்தும் அவனருள் பெற்ற அடியா ரிடத்தும் வழங்கப்படுவதாகும். கடைக் கணிக்கின்றான் கண்ணின் கடைசியாற் பார்த்து அருள்புரிகின்றான். இயலாமை யால் முடியாமையால்.

-

.

3. முருகவேள் கனவிற்கண்ட துன்பமலை

-ஓர்

திரட்டி - சேர்த்து; ஒருதுறை ஓர் இடம்; ஏற்றம்-உயர்வு. நிகராக சமமாக. இவ்வரியிற் சான்றோர் ஒருவர் என்றது, கிரேக்கருட் பேரறிவினராய் விளங்கிய ஸாக்கிரட்டீஸ் (Socrates) என்பவரை யேயாம்: ஏனை - மற்ற. இங்கே குறிப்பிடப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/131&oldid=1583593" இலிருந்து மீள்விக்கப்பட்டது