உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

107

-

மற்றையொரு சான்றோராவார் ஹொரேஸ் (Horace) என்பவரே யாவர். நுகர்ச்சி அனுபவம். சாய்மானக் குறிச்சி-சாய்ந்த படியாய் அமரும் நாற்காலி; நாற்காலியைக் ‘குறிச்சி' என்பது பாண்டியநாட்டு வழக்கு. அயர்ந்தது - தன்னை மறந்தது; கவிந்தது - மூடியது. அறக்கடவுளின் அரசிருக்கை மண்ட அமைப்பின் அழகுரை முதல் நூலில் உள்ளதன்று; இது மறைமலையடிகளே இயற்றிச் சேர்த்ததாகும். சடுதியில் திடுமென. புனிதம் பரிசுத்தம், தூய்மை. என்முகமாய் - என்னை நோக்கி, யானிருக்கும் இடமாய். பசுங்கதிர் பொழியும் - பசிய ஒளியைச் சொரியும். அரசிருக்கை மண்டபம் அரசன் ஐம்பெருங் குழுவும் எண் பேராயமுஞ் சூழ இருந்து, குடிமக்களின் முறையீடு கேட்டு அறம்புரியும் மண்டபம்; இதனை நாளோலக்க மண்டபம் என்றுங் கூறுப.

-

முகடு - உச்சி; பொற்றகடு வேய்ந்து பொன்னாற் செய்த இலைவடிவினால் மூடி. வழு வழுப்பு காலடிவைத்தால் வழுக்கும்படியான அத்துணை மேல்மட்டம். இழைத்த- சீவிய; 'சலவை' என்பது வண்ணானால் வெண்மையாக்கப் பட்டது; மிக வெண்மையான கருங்கல் ‘சலவைக்கல்' எனப்படும். சலவைக் கற்களெல்லாம் பெரும்பாலும் வெண்ணிறத் தனவே யாயினும் அவற்றுட் சிறுபான்மைய கருநிற முடைமையால், அவற்றை நீக்குதற்கு ஈண்டு 'வெள்ளைச் சலவைக்கற்கள்' எனப் பிறிதினியைபு நீக்கும் அடையடுத்து வந்தது.. பொருத்துவாய்- இரண்டு கற்கள் பொருத்தப்பட்ட நடுமூட்டு; அழுத்துதல்

-

-

செலுத்துதல்; பதித்தல் - உட்செலுத்துதலொடு செலுத்தப் பட்டவற்றை ஒரு முறைப் படவைத்தல். படங்கு-மேற்கட்டி. பதித்தல்-உட்செலுத்து தலொடு மேற்கட்டி. விடுபூ - கையாற் சிதறவிடப்பட்ட பூக்கள்; கமழ்ந்தன - நல்ல வாசனை வீசின: குயிற்றி - பதித்து. அரியணை-சிங்காதனம், சிங்கத்தின் வடிவு தாங்கும் வகையாக அமைக்கப்படுதலின் இஃதிப் பெயர் பெற்றது. வறிதாய் - வெறுமையாய். வைகறை விடியற் காலை. சங்கக்குழை - சங்கினாற் செய்யப்பட்ட குண்டலம்; துலங்கல் - விளங்கல். முறுக்கு - புரி. பொருப்பு - மலை. பிறைக்கொழுந்து - பிறையாகிய கொழுந்து; நகும் வெள்ளிய ஒளி விரிக்கும்; பிறையாகிய பிள்ளை சிரிக்கும் என உரைப்பினுமாம். சடைக்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/132&oldid=1583598" இலிருந்து மீள்விக்கப்பட்டது