உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கற்றை

-

மறைமலையம் 16

சடைத்தொகுதி. உரைவரம்பு சொல்லின் அளவு; அமையாத -அடங்காத. அவரவர் செய்த நல்வினை தீவினை கட்கு ஏற்பத் துறக்க நிரயங்களைத் தரும் அறக்கடவுள், சிவபிரானுக்கு அடியவராய்ச், சிவபிரானோ டொத்த திருவுருவம் உடையரென்பது நூல்களால் நுவலப் படுதலின், இங்கே அப்பெருமானுக் குரிய அடையாளங்களே இவர்க்குஞ் சொல்லப்பட்டன. முதல் நூலிற் போந்த ஜூபித்தர் (Jupiter) என்னுங் கடவுளுக்குரிய திருவடையாளங்களுஞ் சிவபிரான் திருவடையாளங்களோடு ஒத்தலின், பழைய பழைய உரோமர் வணங்கிய தெய்வமுஞ் சிவபிரானே போலும்!. அளப்பரிய அளவிடுதல் கூடாது.

-

-

-

-

பணியாளர் ஏவல் செய்வோர். அச்சக்குறிப்பு உள்ளத்தில் உண்டான அச்சம் உடம்பின்கட் புலப்படும்வகை. ஆங்காங்கு அவ்வவ்விடத்தில் நிறைகோல் - நிறுத்து அளக்குந் துலாம். நடுநிலை வழாது நியாயந் தவறாது. பாங்கு - தகைமை. ஈண்டுக் கூறப்பட்ட அறக்கடவுளின் திருவடையாளங்களை ஒவ்வொன்றும் ஒவ்வோர் உண்மைப்பொருளை அடக்கிநிற்றல் அறிந்தார்வாய்க் கேட்டுணர்க. ஆடவர் -ஆண்மக்கள். உது - உதிரிற்றோன்றும் இடம். கட்டளை-உத்தரவு; வரைந்து வைத்தல்-இதற்கென்று பிரித்துத் தனிவைத்தல். பொட்டைத் திடல் மரஞ் செடி கொடி மலை முதலான ஏதொரு பொருளும் இல்லாத வெறு நிலப் பரப்பு. குழுமி - கூடி. போந்த-வந்த. முகில் - மேகம்; ஊடுருவி - நடு நுழைந்து. பெருக்கக் கண்ணாடி சிறிய பொருள்களைப் பெரியவாய்க் காட்டும் ஒருவகைக் கண்ணாடி, (Microscope)

கோளாறு குழப்பம், விகாரம். வெருவுதல் - திடுமென அஞ்சுதல். வீண்எண்ணம் என்பது ஒரு பெண் மகளாக ருவகப்படுத்தப்பட்டமையின், அவ்வீண் எண்ணத்திற்குரிய இயல்புகள் எல்லாம், அப் பெண்ணினிடத்துள்ள பொருள் களாகவுந் தன்மைகளாகவும் உருவகப்படுத்தப் பட்டமை காண்க. கிளர்ச்சி மனஎழுச்சி. பொதிந்து உள்ளிட்டுக்கட்டி. பொறை-பாரம்; கதறுதல்-வாய்விட்டு அலறுதல். பொதி- மூட்டை; உன்னிப்பு - கவனம். வறுமை - தரித்திரம், இல்லாமை.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/133&oldid=1583602" இலிருந்து மீள்விக்கப்பட்டது