உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

109

செருக்கு - அகங்காரம். மனைக்கிழத்தி - இல்லத்திற்கு உரியாள் என்றது மனைவியை. கணை-அம்பு.

.

காதல் என்பது ளைஞராயுள்ள ஆடவர்க்கும் மகளிர்க்கும் இடைநிகழும் பேரன்பு.நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு, பெருமுது மகளிர். பெரிது முதிர்ந்த பெண்டிர். திரைந்த சுருங்கிய. கறை-கறள்; பல்மேல் ஏறிய அழுக்கு; விரவி-கலந்து. இறும்பூது வியப்பு, அதிசயம். பரிய-பருத்த; முரிப்பு எருத்துமாட்டின் பிடரியண்டையுள்ள சதைப் பொதி போல்வது. தசை சதை.

-

-

-

6

-

-

-

மட மை பேர் அறியாமை. பொல்லாங்கு - தீங்கு. கொந்தளிக்கும் - மும்முரப்படும்; விழைவு - இச்சை, மிகுந்த விருப்பம், Passion. மனச்சாய்வு ஆராய்வின்றி ஒன்றனைப் பற்றுதல், Predisposition. மன நொய்ம்மை மனவுறுதி இல்லாமை, frailty. இழைத்த செய்த. காவாலி- தெற்றென- தெளிவாக: அவற்கு- அவனுக்கு; 'அவர்க்கு' என்பதற்கும் அவற்கு என்பதற்கும் உள்ள வேறுபாடு கருத்திற்பதிக்கற் பாலது; முன்னையது பலர்பால், அவருக்கு’ எனப் பொருள்படும்; பின்னையது ஆண்பால் 'அவனுக்கு எனப்பொருள்படும். பட்டி மகன் - குறும்பன், ஊர்சுற்றி, a rogue. நாண் தகைமை - தீயன செய்தற்கு மனங் கூசுதல்.

சூர் அணங்கு அச்சத்தால் வருந்துந் தெய்வப் பெண்; சூர், அணங்கு என்னும் இருசொற்களும் பெரும்பாலும் ஒரு பொருள் மேலன; தன்னந்தனி - மிக்க தனிமை. மனத்தடுமாற்றம் - மனக்கலக்கம். மருண்டேன் - வெருண்டேன். முகமூடியென்பது முகத்தின் வடிவாகச் செய்த ஒரு படல், சில விளையாட்டுக் காலங்களில் இத்தகைய படலை முகத்தின் மேலணிந்து முகத்தை மறைத்தல் ஆங்கிலர்க்குள் ஒரு வழக்கம், இதனை mask என்பர். வாய்மை-உண்மை. உறுப்பு - அங்கம், அவயவம். போகட்ட மையால் - போக விட்டமையால், போகவிடு என்பது சிதைந்து 'போகடு' எனவும் 'போடு' எனவும் வழங்கும். விடுதி - விடுதலை.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/134&oldid=1583607" இலிருந்து மீள்விக்கப்பட்டது