உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 16

உவகை - களிப்பு. எய்தினேன் - அடைந்தேன். குழம்பல் - அடிதலை மாறுதல். அத்தாணி மண்டபம் - அரசிருக்கை மண்டபம். உவந்து மகிழ்ந்து. அலைசல்-இங்குமங்குமாக

-

நடத்தல்; விரைசல் - விரைவு, சருக்கு.

-

போற்றத்தக்க-வழுத்தத்தக்க. காணியாட்சி - நிலம் முதலான உரிமைப் பொருள்களை ஆளல்: உரிமை - சுதந்திரம், அல்லது உரிமைக்காரன் a heir. எடுப்புப்பிள்ளை - சுவீகார புத்திரன்.வெகுண்டு- கோபித்து. கடன்-கடமை. வெரு-சடுதியிற் றோன்றும் அச்சம். பெயர்த்தும் - மறுபடியும். இரந்து-கெஞ்சி, மறித்தும்-மறுபடியும். பொருத்துப்பிடிப்பு

-

மூட்டுகள் இளக்கமா யில்லாமல் விறைத்துப் போதல். ஊதியம் - இலாபம். நோக்குவார் பார்ப்பவர். பண்டமாற்று-ஒரு பொருளைக் கொடுத்துப் பிறிதொரு பொருளைக் கைக்கொள்ளல்.

-

-

வாணிகம்-வியாபாரம்; வாணிகம் தமிழ்ச் சொல், வியாபாரம் வடசொல். சிற்றிடை-சிறுத்த இடுப்பு. செய்துழி - செய்தவிடத்து.இடர்பயப்பது - துன்பந் தருவது. ஒரு தலையாக நிச்சயமாக. உழத்தல் வருந்தல். அனையவும் - எல்லாம். நிலையிடுதற்கு தீர்மானஞ்செய்தற்கு; புகுதேன்-நுழையேன். மொழிந்த சொல்லிய. இமில் முரிப்பு, எருதின் பிடர்

-

-

மேலுள்ள பொதித்தசை. மகளிர்-பெண்மக்கள்.

நெக்குடைந்தது - நெகிழ்ந்து உருகிற்று. விளம்பி-சொல்லி. துணையானே - அளவானே. கோணங்கி - வளைந்த வடிவ முடையோன், அல்லது வளைந்தாடுவோன். அன்னோ - ஐயோ. பகடி பரிகாசம். மேல் இதழ் - மேலுதடு. தெற்றுப் பட்டது தட்டுப்பட்டது; முட்டியது. ஏளனம் - பரிகாசம்.

-

-

-

தீவிய-தித்திப்பான. குப்பி-வயிறு பெருத்து வாய் சிறுத்த ஒருவகைப் பாண்டம். கடைப்படி கடைசி. முறையீடு தமக்குள்ள குறையினைக் கூறுதல். ஈந்தருளுதல் - கொடுத்து அருள் செய்தல், உயர்ந்தோர் தாழ்ந்தோர்க்குக் கொடுத்தலை ஈதல் என்ப. உய்க்கும்படி கொண்டு வந்து சேர்க்கும்படி.

கதுமென - சுருக்கென.

-

-

6

ஒழுகலாறு நடக்கை வகை: நேர்மை

-

செவ்வை,

steadlines. மான்மருட்டும்விழி - தன் அழகினால் மானையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/135&oldid=1583612" இலிருந்து மீள்விக்கப்பட்டது