உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

  • சிந்தனைக் கட்டுரைகள் *

-

111

-

மருளச் செய்யுங் கண். புல்லிப் பார்த்தல் - தழுவிப் பார்த்தல். பருமன் பருத்த அளவு. ஏற்றபடி - இசைந்தபடி; நுகர்ந்து அனுபவித்து. சான்ற மிகுந்த; சொல்லுறுதி - நன்மை பயக்குஞ் சொல், உறுதிச் சொல் என்பது முன் பின்னாய் நிலை மாறியது. வழிப்பட்டு உட்பட்டு; ஒழுக நடக்க. நன்னெறித் திறங்கள் - நல் நடையின் வகைகள்.

-

-

மனம் அழுங்கல் - மனம் வருந்தல். ஏலாமை - இயலாமை, கூடாமை. கடைப்பிடித்து உறுதியாய்ப் பிடித்து.

-

4. மராடன் கண்ட காட்சி

க்கட்டுரை முழுதும் அடிசன் ஆங்கிலத்தில் எழுதிய படியே பெரும்பாலும் மொழி பெயர்த்துரைக் கப்படுகின்றது. இடையிடையே முதனூலிலில்லாத சில வேறுபாடுகளும்

உண்டு.

இம்மை யுலகு - இப் பிறப்பிற்குரிய உலகு. மறுமையுலகு இறந்தபின் மேலுலகு. கையாளும் பொருட்டு எடுத்து வழங்கும்பொருட்டு. சவம்-பிணம். ‘சங்கரமதம்' என்பது கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த சங்கராசாரியாரால் நாட்டப் பட்ட கொள்கை. எண்ணமே உலகமாய்க் காணப்படுகின்ற தல்லாமல், எண்ணத்தின் வேறாய் உலகம் என்பதொரு தனிப்பொருள் இல்லையென்றுங் கடவுளெனவும் உயிரெனவும் ருபொருள் இல்லை, கடவுளே அறியாமையாற் பற்றப்பட்டு உயிர்களாய்த் தோன்றுகின்ற தென்றுந், தன்னைக் கடவுளாக நினைதலே வீடுபேறாகுமல்லது உயிர் கடவுளைச் சென்று தலைக்கூடுதல் அஃதாகதென்றுஞ் சங்கராசாரியார்தாம் இயற்றிய வேதாந்த சூத்திர வுரையிலே கூறினார். இவர்க்கு முன் இருந்த பௌத்தர் கொள்கைகளையே சங்கராசாரியாருங் கைக் காண்டமையால் இவரது மதம் பிரசிந்தபௌத்தம் அல்லது மறைந்த பௌத்தம் எனவும் வழங்கப்படும். இனி, அப்பௌத்த மதம் மாயாவாதம் எனவும் பண்டைநாளிற் பெயர் பெற்றமை யால், அதனோடொப்பதாகிய சங்கராசாரியார் கொள்கையும் பின்றை நாளில் மாயாவாதம் எனப் பெயர் பெறலாயிற்று. முதல் நூலிற் சொல்லப்பட்ட மாயா வாதக் கொள்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/136&oldid=1583617" இலிருந்து மீள்விக்கப்பட்டது