உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 16

ப்ளேடொ (Plato) என்னுங் கிரேக்க அறிஞரதாகும்: இவர் கிறித்து பிறப்பதற்கு முன் ஐந்தாம் நூற்றாண்டிலும் நான்காம் நூற்றாண்டிலும் இருந்தவர். பாற்கரியமதம் என்பது பால் தயிராயினாற்போலக் கடவுளே உலகும் உயிருமாகத் திரிந்த தென்றுரைப்பது. பாஸ்கரர் என்பவரால் இக் கொள்கை நாட்டப்பட்டது பற்றி இது பாஸ்கரமதம் எனப்பட்டது; இதனைப் பரிணாமவாதம் என்றும் வழங்குவர்; இம்மதத்தின் இயல்பினையும், மேற்காட்டிய மாயாவாதத்தினியல் பினையுஞ் சிவஞான சித்தியார் பரபக்கத்திற் கண்டுகொள்க.

-

எடுத்துக்காட்டு உதாரணம். காந்தக்கல் இரும்பைத் தன் மாட்டு இழுப்பது. உரையில் - கட்டுரையில். ஆற்றல்-வலிமை. நிலை நிறுத்துவான் புகுந்து நிலையிடுதற்குப் புகுந்து. ங்ஙனங் கூறினவர் ஆல்பர்ட்ஸ் மாக்நஸ் (Albertus Magnus) உசாவி-கேட்டு. மொழி பெயர்ப்பாளன் ஒரு மொழியில் சொன்னவைகளை மற்றொரு மொழியில்

-

விளக்கிச்

சொல்வோன். ஏவினான் - தூண்டினான். வினா- கேள்வி.

-

குடைவு விளைவு. பிணைந்தது - கலந்தது; அடர்ந்த - நெருங்கின. சுவடு - அடி அழுந்தின அடையாளம்; ஒற்றடிப் பட்டம் ஒற்றை ஆள் மட்டும் செல்லத் தக்க வழி. ஒன்று அடி - ஒற்றடி என வலித்தது. கோளரி - ஆண் சிங்கம்: போழ்ந்து பொழுது. படைக்கலம் ஆயுதம். பற்றுகையில்-பிடிக்கையில்.

-

-

அலைசல் - நெருக்கமாய் இல்லாமை, இடையிடையே வெளிகள் உண்மை. முன்னினான் - எண்ணினான். புதல் குற்றுசெடி. பிறிது - வேறு. பம்பிய நெருங்கி வளர்ந்த. குறுங்காடு - குறிய மரங்கள் செடிகள் உள்ள காடு; அகத்தே- உள்ளே. அரண் - காவற் கோட்டை மதில்; கோலிய-வளைந்த. ஊன் - இறைச்சி, தசை. குருதி - இரத்தம். தீவியமணம் கமழும் - இனிய நாற்றம் மணக்கும். தென்றற்காற்று - தென் பக்கத்தே பொதியமலையிலிருந்து வரும் மெல்லிய இனிய காற்று; அமெரிக்காவுக்கு இத்தென்னாட்டிலிருந்து செல்லுந் தென்றற் காற்று இல்லையாயினும்; இங்குவீசுந் தென்றற் காற்றோடு ஒப்பது அங்கும் உண்டாதலின் அதனை இப் பெயராற் கூறினார். நறுமணம் - நல்ல மணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/137&oldid=1583621" இலிருந்து மீள்விக்கப்பட்டது