உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

125

அவர் தம் மனம் அடங்காதோடிக் காமத்துறையிற் படிதல் சிறிதுமே இல்லையென்று அவர் உணர்வாராக. மற்றுக், காமவேட்கை யுடையார்க்கோ, அவரது மனம் அவர் வழி அடங்கி நில்லாது பலரையும் நச்சி நச்சிக் காமத்துறையில் வீழ்ந்து மாழ்கு மாதலின், மனத்தின்வழிச் செல்வது காமமே யன்றிக் காதலன்றென்பது இனியாயினும் அவர் பண்டைத் தமிழ் நூல்களைப் பயின்று உணர்வாராக!

வீடே

இனிக், காதலன்பின் நுகர்ச்சிக்கு வகுப்பு வேற்றுமை பெரிதுந் தடை செய்வது என்னும் உண்மையை இவர் ஏளனஞ் செய்கின்றனர். இவர் இகழ்ந்துரையாத வெறுங்காம நுகர்ச்சி யிலாவது வகுப்பு வேற்றுமை தடைசெய்து நிற்கின்றதா? என்பதைச் சிறிது உற்று நோக்குதல் வேண்டும். தம்மை அழுத்தந் திருத்தம் வாய்ந்த சைவரெனக் கருதிக்கொள்வாரில் எத்தனையோபேர் தஞ் சாதிவரம்பு கடந்து மறைவிலே குறத்திகளை மருவுகின்றன ரென்றும், புலைச்சிகளின் தோள்களை மருவிக் களிக்கின்றன ரென்றும், பரத்தையர் டே குடியாய்க் கிடக்கின்றன ரென்றும் பலர் பலகாற் சொல்லக் கேள்வியுற்றிருக்கின்றேம். இவர் புகழ்ந்து பேசும் இழிந்த காம நுகர்ச்சியே சாதி வரம்புக்குள் நில்லாது தம்வயப்படார் சாதி வரம்பைமீறிச் செல்லுமாறு ஏவ உயர்ந்த தய்வக் காதலன்பின் வயப்பட்டார் சாதிவரம்பைத் துகளாக்கித் தாங்கொண்ட புனித ஒழுக்கத்தில் நிற்குமாறு அஃது அவரைச் செலுத்துதலாற் போதரும் இழுக்கென்னை? இத்தூய வொழுக்கம் நம் பண்டைத் தமிழ்மக்கட்கு உயிர்போற் சிறந்த விழுமிய ஒழுக்கமாதலின், இதனை யறிவுடையாரெவருஞ் சிறிதுங் குறைகூறா ரென்க.

2. இலக்கண நூல்

உண்மை

தொல்காப்பியர் அருளிச் செய்தது இலக்கண நூலாதலின், அவர் பொருளை அகம் புறம் என வகுத்து, அகப்பொருளின் பாற்பட்ட இன்பத்தை முதற்கண்வைத்து, அறம்பொருள்களை அதன் பின் வைத்தாரல்லது. இன்பத்துக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்பதுபற்றி அதனை முதற்கண் வைத்தாரல்லர்; என்று அம்மறுப்புரைகாரர் கூறித், தொல்காப்பியர் இன்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/150&oldid=1583683" இலிருந்து மீள்விக்கப்பட்டது