உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

141

அன்பு அதன் காரியமுமாய் நிற்பதாமென்றும், காதலர்க்குள் நிகழும் அன்பினைக் கூறவே அதற்கு முதலான இன்பமுந் தானே போதருமென்றும் உணர்ந்து கொள்க.

அற்றேற், கணவனும் மனைவியுமல்லாத பிறசேர்க்கை யிலும் அன்பு நிகழக் காண்டுமாதலின், ஆண்டெல்லாங் காதலின்ப முண்டென்பது யாங்ஙனம் பெறப்படுமெனிற் கூறுதும்: எமது சைவசித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் உலகத்து மக்கள் மாட்டு நிகழும் அன்பின் சேர்க்கைகளை யெல்லாம் நால்வகைப்படுத்துச்,

'சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம் தாச மார்க்கம்' என்று கூறி, இந்நூல்வேறு வகையில் நிகழும் அன்பும், இறைவன் பால் அடியார்க்கு அவரவர் தரத்திற் கேற்ப நிகழுமென வலியுறுத்திற்று. இது காண்டு அன்பின் தொடர்பும் அதற்குக் காரணமாவதும் ஆராய்ற்பாலன. கீழ்ப்படியின் முதலில் தாசமார்க்கம் நிற்பது; அஃது ஒருதலைவனுக்கும் அவனுக்கு ஏவல் செய்யும் அடியானுக்கும் இடை நிகழும் அன்பின்தொடர்பைக் காட்டும். ஏவலா ளில்லையேல் தானே செய்து முடிக்கவேண்டுந் தொழில்களை ஒருதலைவன் மேற்கொள்வனாயின் அவன் எவ்வளவு துன்புற்று வருந்துவன்! அவ்வாறின்றித், தன் சொல்லுங் குறிப்புங் கட வாத

நல்ல ஓர் ஏவலன் தன்தலைவன் இடர்ப்படுதற்குரிய தொழில் களைத் தான் நன்கு செய்து முடிப்பனாயின், அதனால் அத்தலைவன் இன்புற்றுத் தன்ஏவலனும் இன்புற்றிருக்குமாறு அவற்கு ஊண்உடை உறையுள் முதலிய நலங்களெல்லாம் நல்கக் காண்டு மல்லமோ? இவ்வாற்றால் ஒரு தலைவனாவான் தனக்கோர் இன்பத்தை நாடியும், ஏவலனாவான் அவற்குப் பணிபுரியுமாற்றால் தனக்குவரும் இன்பத்தை நாடியும் ஒருவரோடொருவர் தொடர்புடையராய் வாழ்கின்றரேயல் லாமல், அவ்விருவரும் இன்பத்தை நாடாது தொடர்புறக் காண்கிலேம். ஆகவே, அவர் தமக்குள் நிகழும் அன்பின் தொடர்ப்புக்கும் இன்பமே காரண மென்பது பெற்றாம் த்தொடர்பின்கண் தலைவன் உயர்ந்தோனும் ஏவலன் தாழ்ந்தோனுமாய் இருத்தலின் ஏவலன் தலைவனை அணுகாது அகன்றொழுகும் நிலையினனாவன். வ்வாற்றல் இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/166&oldid=1583759" இலிருந்து மீள்விக்கப்பட்டது