உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

143

னி, இதற்குமேல் நாலாம்படிக்கண் இறுதியாய் நிற்பது சன்மார்க்கம் என்று உயர்த்துச் சொல்லப்படுவதாகும். இ ஃது ஒரு தலைவன்பால் அவனோடு உயிரும் உடம்பும் ஒன்றான அவன்றன் காதலிக்கு உளதாகுங் காதலன்பின் சேர்க்கை யேயாகும். இதற்குக்கீழ்ப் படியில் நின்ற தோழரது சேர்க்கை மிகச் சிறந்ததேயாயினும், அஃது அவர் தம் உள்ளத்தளவாய் நிற்பதேயன்றி, அவர்தம் உடம்பையும் பற்றி நிற்பதன்று. மற்றுக், காதலன்பின் வயப்பட்ட தலைவன் றலைவியர் சேர்க்கையோ அவர் தம் உள்ளத்தையேயன்றி உடம்பையும் ஒருங்கு பிணித்து, அன்பின் சேர்க்கைகள் எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாய்த் திகழ்வதாகும். இங்ஙனம் நிகழும் இம் முடிந்த சேர்க்கைக்கண் உண்டாம் இன்பப் பெருக்கின் நிலை அந்நிலைக்கண் வைகும் அவ்விருவர்க்கல்லாமல் வேறெவர்க்குந் தினைத்தனையும் புலனாகாது; இஃது உணர்த்துதற்கன்றே, தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்,

“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு”

என்றருளிச் செய்ததூஉம், மாணிக்கவாசகப் பெருமான், “உணந்தார்க் குணர்வரி யோன்தில்லைச்சிற்றம் பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாய்இக் கொடி யிடைதோள், புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும் போகம்'

என்றருளிச் செய்ததூஉமென்றுணர்ந்து கொள்க.இவ்வாறெல்லாம் இவ்வுலகத்து நடைபெறாநிற்கும் இந்நால்வகைச் சேர்க்கை களும் நன்களந்து காணவல்லார்க்கு, அவையெல்லாம் அன்பி னையும் அதற்கு வித்தான இன்பத்தினையுமே உயிராய்க் கொண்டு நிற்றல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதிற் புலனாம். எனவே, அன்புக்கு முதன்மை சொல்லும் இடங்களி லெல்லாம் அதற்கு முதலான இன்பமும் உடன்விராய் நிற்கு மென்றும், அது குறித்தே மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை இன்பமே என்னுடை அன்பே' என அவ் விரண்டையும் ஒருங்கு புணர்த்தோதினாரென்றும் உணர்ந்து,

அம் மறுப்புரைகாரரின் பிழைபாட்டினைத் தெரிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/168&oldid=1583768" இலிருந்து மீள்விக்கப்பட்டது