உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

144

மறைமலையம் 16

11. ‘காமம்' என்பது உயர்பொருளும் இழிபொருளுந்

தரும்

இனி, யாம் காதலின்பம் உயர்ந்ததெனவுங் காமவின்பந் தாழ்ந்ததெனவுங் கூறியதனை அம்மறுப்புரைகாரர் பிழை யெனப் புகன்று, காமம் என்பது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்து மெனக் கிளந்ததனைச் சிறிது ஆராய்வாம்.

'காமம்' என்னுஞ் சொற்பொதுவாய் ஓர் ஆண்மகற்கும் ஒரு பெண்மகட்கும் இடை நிகழும் உடம்பின் சேர்க்கையால் உண்டாம் இன்பத்தினை உணர்த்துமன்றி, யாண்டும் அஃது உயர்ந்த இன்பத்தினையே உணர்த்துவதன்று. அங்ஙனமின்றி மறுப்புரை காரர் கூறுமாறு அஃது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்துவதொன்றாயிற், “காதற்காமங் காமத்திற் சிறந்தது” என யாம் மேலெடுத்துக்காட்டிய பரிபாடற் பழஞ் சான்றோர் தம் மெய்ம்மொழிக்கு யாங்ஙனம் பொருளுரைப்பர்? காமம் என்னுஞ் சொல்லே உயர்ந்த வின்பத்தினை யுணர்த்துமாயின்

சிரியர் குன்றம்பூதனார் ‘காதற்காமம்’ என அதற்கு வேறு அடைமொழிகொடுத்ததுங், காதற்காமமே காமவின்பத்திற் சிறந்த தென்றதும் என்னை? மக்கள்பாற் பொதுமையில் நிகழுங் காமவின்பங்கள் பலவற்றுட், காதலன்பின் விளைவான காமமே சிறந்ததென அவர் உரைக்குமாற்றாற், காமம் என்னுஞ் சொல் உயர்ந்தகாமத்திற்கும் இழிந்த காமத்திற்கும் பொதுவாய் நின்று புணர்ச்சி யின்பத்தினை யுணர்த்துமென்பது புலப்பட வில்லையா? ஆசிரியர் நக்கீரனார் இறையானரகப் பொருளுரை’ யிற் “களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானும் கடியப் பட்டன? அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின்; அற்றன்று, களவு எனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉங், காமம் என்னுஞ் சொற்கேட்டுக் காமந் தீதென்பதூஉம் அன்று; மற்றவை நல்லவாமாறும் உண்டு” என்றுரைத்த மெய்யுரை யாற், ‘காமம் என்னுஞ்சொல் இழிந்த இன்பத்தின் மேற்றாயும் உயர்ந்த இன்பத்தின் மேற்றாயும் வருதல் தெளியப்படுகின்ற தன்றோ? அற்றேல், ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை உயர்ந்தவின்பத்தின் மேற்றாகவே வைத்துரைத்த தென்னை யெனின்; அச் சொல் உயர்ந்த வின்பத்தினையும் உணர்த்து

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/169&oldid=1583773" இலிருந்து மீள்விக்கப்பட்டது