உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தமக்கு

மறைமலையம் 16

வரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு அவ்வாற்றால் ஒருவருக்கொருவர் உதவியாய் நிற்ப, நடைபெறுவதாகும். ஒருவரே வேண்டும் பொருள்களையெல்லாந் தம்முடைய முயற்சியினாலேயே தேடிக்கொள்ளுதல் இயலாது. பசித்த வேளைக்குக் காயோ கனியோ பச்சிலையோ உண்டு, தழை களை உடுத்துக், குகைகளிலும் மரப்பொந்துகளிலும் இருந்து உயிர் வாழும் மக்களுங்கூடத் தம்முள் ஒருவருதவியை ஏனையோர் வேண்டி நிற்கின்றார்.ஏதொரு முயற்சியுஞ் செய்ய அறியாத சிறு குழவிப் பருவத்தும், முயற்சி அவிந்த முதுமைப் பருவத்தும் மக்கள் பிறருதவியைப் பெறாமற் பிழைத்தல் இயலாதன்றோ? முயற்சியும் ஆற்றலும் உடைய இளம் பருவத்தினருங்கூட இடையிடையே வரும் நோயானும் பிற துன்பங்களானுந் தம் முயற்சியும் வலிவும் இழந்து பிறருதவியை அவாவியபடியாய்க் கிடத்தலையுங் காண்டு மன்றோ? நாகரிகமில்லா மக்களுள்ளேயே ஒருவருதவியை ருவர் நாடாது உயிர் வாழ்தல் இயலாதாயின், அறிவும் இன்பமும் முறை முறையே மிகும் நாகரிக வாழ்க்கையில் உள்ளார்க்கு ஒருவருதவியை யொருவர் அவாவாது காலங் கழித்தல் இயலுமோ? உழவும் நெசவும் வாணிகமும் அரசும் போரும் ஓதுதலும் இறைவற்கு வழிபாடு ஆற்றுதலும் பிறவுமாகிய தொழில்களை யெல்லாம் மக்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே செய்வதென்றால், அதற்கு அறிவும் ஆற்றலும் போதாமையோடு வாழ்நாளுங் காணாது. ஆகவே, ஒவ்வொரு தொழிலையுஞ் சிறப்பாகச் செய்தற்கு ஒவ்வொரு தொகுப்பினர், இப் பரத நாட்டிலே மட்டுமன்றி நாகரிகத்திற் சிறந்த ஏனை அயல் நாடுகளிலும் இன்றியமையாது இயற்கையாகவே பண்டு தொட்டு வகுக்கப்படுவாராயினர். இங்ஙனமாகப் பரந்து பல வேறு வகைப்பட்டு நிகழுந் தொழில்களைச் செய்யும் மக்கள் எல்லாம் பதினெண் வகுப்பினராகத் தமிழ்நாட்டின்கட் பிரிக்கப் பட்டனர்.மற்று, ஆரியர் வந்து குடியேறிய வட நாட்டிலோ எல்லாத் தொழில்களுங் கைத்தொழிலும் உழவு வாணிகமும் அரசும் ஓதுதலும் என நால்வகையுள் அடக்கப் பட்டு, அவற்றைச் செய்வார் முறையே சூத்திரரும் வைசியரும் க்ஷத்திரியரும் பிராமணரும் என நால்வகுப்பாகப் பிரிக்கப் பட்டனர். இவ்வாறு தென்னாடு வட நாடுகளிற் றொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/171&oldid=1583783" இலிருந்து மீள்விக்கப்பட்டது