உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் 16

சேக்கிழார் கூறியிருத்தல்கொண்டு, அவன் சிவபிரானை வணங்குதலிலுங் கருத்து ஒருப்படுதல் இலன் என்பது நன்கு புலனாகின்றது. அவன் உண்மையிற் சிவபிராற்கு அடியவனா யிருந்தால் அங்ஙனங் கடற்சிறு தெய்வத்தை வணங்கானன்றோ? மேலும், அவன் சிவபிரானிடத்தாவது சிவபிரானடியவரிடத் தாவது தினைத்தனை யன்புதானும் உடை ய னன்பது

ஆசிரியரால் எங்கேனுங் குறிக்கப்பட்டுளதா? சிறிதுமில் லையே. இங்ஙனமெல்லாம் ஆசிரியர் சேக்கிழார் கூறி யிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளைப் பலபடியானும் ஆய்ந்து பார்க்கும் வழிக், காரைக்காலம்மையார்க்குத் தக்க கணவன் அவனல்ல னென்பது சிறுமகார்க்கும் எளிதின் விளங்காநிற்கும். இவை யெல்லாம் ஒருசிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத அம் மறுப்புரைகாரர் ஏதொரு சான்றுங் காட்டாது, அவன் அவர்க்குத் தக்க கணவனே என அழிவழக்குப் பேசியது கண்டு அறிவுடையார் அவர் கூற்றை எள்ளி நகையாடி விடுப்பதன்றி வேறு என் செயற்பாலார்!

தன்னை வணங்குதற்குரிய

இனித், மனையாளாகிய அம்மையாரைக் கணவனாகிய தான் வணங்கியது அவரிடத்துக் கண்ட தெய்வத் தன்மை பற்றியேயாதலின், அதுகொண்டு அவனை அவர்க்குத் தக்கானல்லன் என்றல் அமையாது என அம் மறுப்புரைகாரர் எமது மேற்கோளை ள மறுத்தார். தெய்வத்தன்மை கண்டபின் அவன் அவரை அன்பினால் வணங்கினானை அச்சத்தால் வணங்கினானை என்று ஆராய்ந்து பார்த்தனராயின், அங்ஙனம் போலிமறுப்பு எழுத முன்வந்திரார். அவன் வணங்கியது அன்பினால் நிகழ்ந்ததாயின் அத்தகைய அன்பு அவன்பால் முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். முன்னரே அன்பினாற் பற்றப்பட்டிருந்தானாயின், அவ்வன்பின் பெருக்கால் அவர்தந்திருந்தொண்டின் அரிய மாட்சிகனை உணர்ந்திருந்தனனாயின், அம்மையாரை ஓரிமைப் பொழுதாயினும் பிரிந்திருக்க உளம் ஒருப்படுவனோ? அவரோடு ஒருங்கிருந்து அவர் செய்துபோ தருஞ் சிவநேயத் திருத்தொண்டிற்குத் தானு முதவியாய் உடனிருந்து அதனைச் சிறக்கச்செய்து தானும் மகிழ்ந்து அவரையும் பெரிது மகிழ்விப்பனன்றோ? அன்புடையார் செயல் இதுவாயிருக்க, அவனே அவ்வன்புக்கு மாறாய் அம்மையாரைக் காளியோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/181&oldid=1583830" இலிருந்து மீள்விக்கப்பட்டது