உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

157

கூளியோ, பேயோ, பூதமோ எனப் பிழையாக நினைந்து உள நடுநடுங்கி அவரைவிட்டு அவர் அறியாமே அகன்று, சேய்மைக் கண்ணதான பிறிதொரு நாட்டிற்சென்று குடியேறினான் என்பதனால், அவன் அம்மையாரின் உண்மைநிலை தெரிந்து அவர்பால் அன்பு பூண்டு ஒழுகினவன் அல்லனென்பதூஉம், அம்மையாரை அவர்தஞ் சுற்றத்தார் வலியக்கொண்டுபோய் அவன்பாற் சேர்ப்பித்த ஞான்றும் அவன் தன் இரண்டாம் மனைவிமக்களோடு எதிர்போந்து, அவரை வணங்கியது, அவர் தனக்குந் தன்குடும்பத்தார்க்கும் ஏதேனும் தீங்கு இழைத்து விடுவரோ என்னும் அச்சத்தாலன்றி அன்பினாற் செய்ததன்றாதலின், அவன் அவரை வணங்கிய வணக்கம் அவர்க்குத் தக்கான் ஒருவனாற் செய்யப்பட்ட தாகா தென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க. ஆகவே, அம்

மறுப்புரைகாரர் அவன் உளப்பான்மையினைப் பகுத்

துணர்ந்து பாராது, அவனை அவர்க்குத் தக்கானென்றது பொருத்தமில் போலியுரையா மென்க.

னிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அவர் தஞ் சுற்றத்தார் கூட்டிவைத்த மணத்தை இறைவன் தடுத்தருளியவாறுபோல, அம்மையார்க்கு நிகழ்ந்த திருமணத்தையும் அவன் தடுத்தி லாமை அவர்பால் அவற்கு அருளிரக்கம் இன்மையாற் போலும்! என்று அம் மறுப்புரைகாரர் மற்றொன்று சொல்லிக் குறிப்பால் எம்மை ஏளனஞ் செய்திட்டார். இறைவன் அடியார்க்கு அருள் செய்யும் முறைகள் பல பெற்றியவாய் நம்ம னோர்க்கு முரண்பாடுடைய போற் காணப்படும். அவற்றுக் கெல்லாங் காரணங்களென்னையென இறைவனையே கேட்டல் வேண்டுமன்றி, ஏனை மக்களைக் கேட்டால் அவை ஒருசிறிதும் புலனாகா. மாணிக்கவாசகர் காணர்ந்த பாண்டியன் பொருளையெல்லாங் கவர்ந்து நரிகளைப் பரிகளாகவும் பரிகளை நரிகளாகவும் மாறச்செய்து அருள் செய்ததும், திருஞானசம்பந்தர்க்கே திருமுலைப்பால் ஊட்டி அருள்செய்ததும், இயற்பகைநாயனார் மனைவியை அவர் பாற் பெற்றுச்சென்று அருள்செய்ததும், மெய்ப்பொருள் நாயனாரை அவர்க்குப் பகைவனாயினான் கையினாற் கொலைசெய்வித்து அருள்செய்ததும், சிறுத்தொண்ட நாயனார், பிள்ளையை அறுத்துக் கறிசமைக்கச் செய்து அருளியதும், குங்கிலியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/182&oldid=1583835" இலிருந்து மீள்விக்கப்பட்டது