உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

159

அனிந்திதை என்னும் நங்கையாரைக்கண்டு காமுற்றுக் குற்றஞ் செய்தனரென்றார். இதனைக் கூறுகின்றுழிச், சிவபிரான் றிருவருளால் ஆலாலசுந்தரர் மனம் அந் நங்கையர்மாட்டும், அந்நங்கையர்மனம் ஆலாலசுந்தரர் மாட்டும் பதிந்தன என்று முதலிற் சொல்லிப், பின்னர்ப் பெருமானுக்கு மலர் எடுக்குங்கால் அங்ஙனம் அவர் காமுற்ற குற்றத்திற்காகவே நிலவுலகத்திற் பிறக்குமாறு இறைவனால் ஏவப்பட்டார் என முன்னொடு பின் முரண உரை நிகழ்த்தினார். சிவபிரான் சிவபிரான் றிருவருளால் உந்தப்பட்டே அங்ஙனஞ் சுந்தரரும் அம் மாதரிருவரும் ஒருவரையொருவர் காதலித்தனராயின், அஃது அவர்க்குக் குற்றமாதல் யாங்ஙனம்? அக் குற்றத்தைச் செய்யுமாறு ஏவிய றைவற்கன்றே அது குற்றமாம்? தானே அவரை ஏவிக் குற்றமான தொன்றைச் செய்வித்தபின், அவரை அதற்காக ஒறுத்தல் இறைவற்கேயன்றோ அதனினும் பெரியதொரு குற்றமாம்? ‘எய்தானிருக்க அம்பை நோவ தெவன்?'

மேலும், ஆணுடம்புக்கு ஏற்ற அமைப்புகளும் பெண்ணுடம்புக்கு ஏற்றஅமைப்புகளும் இறைவன் அத்துணை வியப்பாக வகுத்தமைத்தது எதன்பொருட்டு? அவ்விருபாலாரும் ஒருவரையொருவர் மருவி இன்பம் நுகர்தற்பொருட்டும், பிறவிக்கு வரற் பாலனவான உயிர்களைப் பிறவியில் வருவித்தற் பொருட்டுமன்றோ? ஆணும் பெண்ணுமாய் மருவுதற்கேற்ற இடம் இந்நிலவுலகமேயாயின், அராக தத்துவத்தின் கண்ண தான திருக்கைலையில் ஆண் பெண் அமைப்புகளை இறைவன் வகுப்பானேன்? மேலுள்ள அவ்வத் தத்துவ வுலகங்களில் வைகும் உயிர்களெல்லாம் ஆணும் பெண்ணுமா யிருந்தே இன்ப நுகராநிற்பரெனப் பௌட்கராகமம் புகலா நிற்க, ஆலாலசுந்தரருங் கமலினி அநிந்திதையரும் ஒருவர் மேலொ ருவர் மையல் கொண்டதுமட்டும் குற்றமாமெனக் கூறல் யாங்ஙனம் பொருந்தும்? இறைவன் உயிர்களை ஆணுடம்பு பெண்ணுடம்புகளிற் புகுத்தியது அவ்வாற்றால் அவர் இன்பநுகர்ந்து செல்லுதற்பொருட்டேயா மெனச் சைவ சித்தாந்த வழிநூலாகிய சிவஞானசித்தியார்,

66

“சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம்

ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/184&oldid=1583844" இலிருந்து மீள்விக்கப்பட்டது