உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

161

கிளக்கும் இப் பொய்க் கதையினை மட்டும் அவர் நம்பிக் கூறினாரென்று அறிவுடையோர் சொல்ல முற்படுவரோ?

இருந்தவாற்றால், இக்கதையின் பொய்மைத்தன்மை யினை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள், சிவ அந்தணர்குலத்திற் றோன்றியருளின சுந்தரர் தமது மரபினர் அல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென எந்நேரமுந் தமது சாதி யுயர்வினையே நினைந்திருந்தவரான ஒரு பார்ப்பனரால் தமது சாதிக்குக் குறைவு வந்து விடலாகா தனுங் கருத்தால், அப் பொய்க் கதை கட்டிச் சேர்க்கப்பட்ட தென்பதைத் தெற்றென உணர்ந்து கொள்வர். கைலையிற் செய்த குற்றத்திற்காகச் சுந்தரர் இந் நிலவுலகத் திலுந் தமது சாதிவரம்பு கடந்து குற்றமாவது செய்து ஒறுக்கப் பட்டா П ரென்று ஒரு காரணங் காட்டி, அவ்வாற்றால் தமது சாதி வரம்பைக் காத்துக்கொள்ளப் பெரிதும் அவாவுற்று அப் பார்ப்பனர் அப் பொய்க்கதையினைப் புனைந்து செருகினமை வேறுமோருண்மையாலும் புலனாகா நிற்கின்றது; என்னை? முதலில் ஒரு குற்றத்தைச் செய்தவர் பின்னும் அக்குற்றத் தினையே செய்குவராயின், அது முன்செய்த குற்றத்திற்குக் கழுவாயாகுதல் செல்லாமையின் என்பது.

சுந்தரர் கைலையில் அம் மாதர்மேற் காமுற்றது குற்ற மாயின், அது தீர்தற்கு அவர் இம் மண்ணுலகிற் காம நினை வற்றுத் தவத்திலன்றோ இடையறாது அமர்தல்வேண்டும்; அவ்வாறின்றி அவர் மீண்டும் அம் மாதர்மேல் மையல் கொண்டு இன்ப நுகர்ந்திருத்தல், கைலையிற் காமுற்ற குற்றத்திற்குக் கழுவாயாகுமோ? அற்றன்று, இறைவன் திருக்கைலையைச் சார்ந்ததார்க்கு மாதரைக் காமுறுதல் குற்றமாகலின், அக் குற்றத்திற்காகவே அவர் அத்தெய்வுலகினின்று இம் மக்களு லகிற்குக் கீழ் நூக்கப்பட்டார்; அஃது அவர்க்குக் கழுவாயா மெனின்; இறைவனடி சேர்ந்தார்க்குங் காமவிருப்பு நிகழு மாயின், இறைவனடியைச் சேர்தலில் இன்பமில்லை யென்பது பெறப்பட்டு அது,

“தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி”

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/186&oldid=1583855" இலிருந்து மீள்விக்கப்பட்டது