உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 16

“தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்றும் போத்த அருமைத் திருமொழிகட்கெல்லாம் மாறாம். அற்றன்று, ஆலாலசுந்தரர் ஆண்டு இறைவன் திருவடிப் பேறு எய்தியவரல்லர்; இறைவன் திருவுலகு சேர்ந்து ஆண்டு அவனை வழிபட்டமரும் அத்துணைப் பேறே வாய்ந்தவரா வரெனின்; இம்மையுலகத்து வழிபாடுபோலன்றி, இறைவன்றன் உண்மையுருவினை நேரே கண்டு வழிபடும் அம்மையுலக வழிபாடும் சுந்தரர்தங் கருத்தைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியிலதாயின், அதனாற் போதரும் பயன் என்னையோ வென்று வினா நிகழுமன்றே? அதனாலும், அக் கதை உண்மை யன்றென்பது தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, மேன்மேலுள்ள நுண்ணிய தத்துவ வுலகுகளில் உள்ளாரும் ஆணும் பெண்ணுமாயிருந்தே கழிபேரின்பம் நுகர்வரென்று பௌட்கராகமங் கூறுதலே மேலெடுத்துக் காட்டினமாதலாற், சுந்தரர் அத் தேவ கன்னியரைக் காதலித்தது இறைவன் திருவுளக்குறிக்கு மாறாகா தன்பதூஉம் போதரும்; அதனாலும், அக் காதலைக் குற்றமென நுவலும் அக் கதை பொய்யென்பதே தேற்றமாம்.

மேலுந், திருக்கைலையிற் செய்த குற்றத்திற்காக றைவன் அம் மூவரையும் ஒரேகுலத்திற் பிறப்பியாது, சுந்தரரைச் சிவ அந்தண உயர்குலத்திலும், பாவை சங்கிலியாரை அதனிற்றாழ்ந்த பிறகுலத்திலும் பிறப்பித்துப், பின்னர் அவரை ஒருங்குகூட்டி, "நீர் உயர்த்துக்கூறுஞ் சாதிவேற்றுமைக் கட்டுப்பாடினைச் சிதைத்தது. நும் மிறைவற்கே மக்கள் இறுமாப்பால் வகுத்த சாதிக்கட்டுப்பாட்டில் விருப்பு இல்லைபோலும்!” என்று கடாவுவார்க்கு அம் மறுப்புரைகாரர் இறுக்குமாறறியாது விழிக்கு நீரராவராகலின், அவர் கூறும் அக் கதையே அவர்கொண்ட சாதிச் செருக் கினைத் தொலைக்கும் பெற்றியதாதலுங் காண்க. இதனால், ‘யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்' என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/187&oldid=1583860" இலிருந்து மீள்விக்கப்பட்டது