உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

163

பழமொழிப் பொருள் அம் மறுப்புரைகாரர் உரை கொண்டே புலனாகின்றதன்றோ?

இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து

பார்க்கவல்லார்

எவர்க்கும், சிவ அந்தணராகிய சுந்தரர் தம்மரபினரல்லாத பரவை சங்கிலி யாரை மணந்தது குற்றமாமெனக் காட்டுதற்கு விழைந்த ஒரு பார்ப்பனரால் அக் கதை பொய்யாகப் புனைந்து, சேக்கிழார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத் திடையே சேர்க்கப்பட்ட வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கும். இவ்வாறாக, முன்இல்லாத கதைகள் பின்வருவோராற்

புதிது புதிதாகப் புனைந்துகட்டிச் சேர்க்கப்படுதல் உண்டென்பதற்கு, ஆறுமுக நாவலர் வரைந்த பெரியபுராணவசனத்தில் ‘இறைவன் திருக்கைலையில் ஒருநாட் கண்ணாடியையெடுத்து அதன்கட்டனது திருவுருவைநோக்க அது சுடர்விடு பேரழகாய் அதன் கட்பொலிந்து தோன்றக் கண்டு 'சுந்தரமே வா!' என்றழைக்க, அஃது ஆலால சுந்தரராய்க் கண்ணாடியை விட்டுக் குதித்து நின்றது' என்னும் ஒருபொய்க் கதை சேக்கிழார் பெரியபுராணத்தில் இல்லா திருந்தும் புதிதாக எழுதிச் சேர்க்கப் பட்டிருத்தலே சான்றாம்.

இங்ஙனமே, சமணர் கழுவேறிய கதைக்குத் தேவாரப் பதிகங்களில் ஏதொரு குறிப்புங் காணப்படாதிருந்தும், அஃது எவ்வாறோ பெரியபுராணத்தில் நுழைந்து விட்டது. மாணிக்கவாசகரொடு வழக்கிட்டுத் தோற்ற பௌத்தர்களைச் செக்கிலிட்டு அரைத்தகதை, பெரும்பற்றப்புலியூர் நம்பி யருளிய திருவிளையாடற் புராணத்தில் இல்லாதிருந்தும், அதற்குப் பன்னூறாண்டு கழித்துப் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் இவ்வாறே முன் நூல்களில் இல்லாத பல பின்நூல்களிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். ஆதலால், ஒரு புராணத்திற் சொல்லப்பட்டிருப்பது கொண்டு, ஒரு கதையின் பொய்மை மெய்மையினை நன்காய்ந்து பாராது அதனை அவ்வாறே நம்புதல் வழுவாமென்க. எனவே, சுந்தரமூர்த்தி நாயனார் பாவை சங்கிலியாரை ஒருங்கொத்து நிற்றலானும், அம் மணத்தைக் கூட்டுவித்தற்கு இறைவனே முன் நின்றானென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/188&oldid=1583864" இலிருந்து மீள்விக்கப்பட்டது