உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் -16

ஆசிரியர் சேக்கிழார் ஆ ண்டாண்டு

நன்கெடுத்துக் கூறுதலானும் அது குற்றமாதல் ஒருவாற்றானுஞ் செல்லா தன்றும், அதனைக் குற்றமாக நினைந்து அதற்கொரு போக்குவிடுதற்பொருட்டுப் பின்வந்த பார்ப்பனர் பொய்யாகக் சேர்த்த திருமலைச்சருக்க லச்சருக்க கதை சேக்கிழார் செய்ததன்றென்றுங் கடைப்பிடித்துணர்ந்து கொள்க.

கட்டிச்

இங்ஙனம் முழுப்பொய்யாகிய ஒரு கதையினைத் தமது சாதியிறுமாப்பினாற் புனைந்துகட்டிப் பெரியபுராணத்தின் முதலிலே சேர்த்துவிட்ட பார்ப்பனர்தம் பொய்யுரைக்கும், பார்ப்பனராற் சூத்திரச் சாதியினராக வைத்து எள்ளப்படும் அம் மறுப்புரை தமக்கும் உயர்வுதேடிக் கொள்ளுதற் பொருட்டு அக் கதையினை உண்மையாய்க்கொண்டு எழுதிவிட்ட போலி மறுப்புரைக்கும் வேற்றுமை காண்கிலம். அப்பொய்க்கதையை எடுத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய போலி மறுப்புரைகள் அத்தனையும், முயற்கொம்பு இரண்டு முழமா நான்கு முழமா என்று வழக்கிட்டார் வழக்குரைக்கும், "ஒப்பிலா மலடிபெற்ற மகன் ஒரு முயற்கொம்பேறித், தப்பில் ஆகாயப்பூவைப் பறித்தமை சாற்றினாருரைக்குந் தோழமை யாக வைத்து அறிஞரால் நகையாடி விடற் பாலனவா மென்க.

66

.

இன்னும், அம் மறுப்புரைகாரர் ஆலால சுந்தரரைப்பற்றி யெழுதியவற்றில் முன்னொடுபின் முரணாவன பல. அவற்றுட் சில இங்கே காட்டுதும். நிலத்திற் போய்ப் பிறந்து இன்பம் நுகருமாறு சுந்தரரை றைவன் ஏவியவழித், தம்மை இறைவனே வந்து தடுத்தாட்கொள்ளுமாறு அவர் வேண்டினா ரென்று அக்கதையினை அவர் எடுத்துக்காட்டினார். தாம் வன்மைகள் பேசி இறைவனை வேண்டாதிருக்கையிலும் இறைவனே வலியவந்து ஆட்கொண்டமை பற்றியே சுந்தரர் வன்றொண்டர்' எனப் பெயர் பெற்றார். அவ்வாறன்றித், தாம் வேண்டியதற் கிணங்கியே இறைவன் வந்து ஆட்கொண்ட துண்மையாயின், சுந்தரர்க்கு ‘வன்றொண்டர்” எனும் பெயர் வழங்குதல் ஒக்குமோ? வன்மைகள் பேசினமையின் 'வன்றொண்டர்' எனப் பட்டாரெனின், வன்மைகள் பேசினது தாம் இறைவற்கு ஆளாகவேண்டாமை பற்றியன்றோ? ஆகவே, தாம் அவற்கு ஆளாதலிற் கருத்தின்றியிருக்க இறைவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/189&oldid=1583869" இலிருந்து மீள்விக்கப்பட்டது