உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

165

வலியவந்து அவரை ஆட்கொண்டமை நன்கு விளங்குதலின், திருக்கைலையில் அவர் வேண்டியதற்கிணங்கியே இறைவன் போந்து அவரைத் தடுத்தாட்கொண்டனன் என்னும் அக்கதை பொய்யேயாதல் திண்ணம்.

அற்றன்று, திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டிய தனை மறந்து சுந்தரர் திருமணப்பந்தலில் வன்மைகள் பேசினமை பற்றியே வன்றொண்டர் எனப் பட்டா ரெனின்; றைவனுக்கு அணுக்கராய்த் திருக்கைலையில் மேற் சுந்தரர் பிறந்தது உண்மையாயின், முற்பிறவியிலே திருக்கை லையில் தாம் இறைவனை வேண்டிக்கொண்டதனை மறந்து வன்மைகள் பேசுதல் கூடுமோ? இம் மண்ணின்மேற் பிறந்த பொது மக்களுள்ளேயே சிறுகுழந்தைகளா யிருப்பார் சிலர் தமது முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்து உரைத்தல், வட நாட்டின் கண் உள்ள ‘இராமகாளி' முதலான சிறு குழந்தைகள் மாட்டு இன்றுங் கண்கூடாய்க் காணப்படுவதாயிருக்கச் சிவ பிரானுக்கு அணுக்கராயிருத்தற்குரிய அத்துணைப் பெருந்தவம் வாய்ந்த சுந்தரர் தமது முற்பிறவி வரலாற்றினை மறந்து போயினாரெனக் கூறுதல் ஒக்குமோ! அக் கதையிற் சொல்லப்பட்ட திருக்கைலை நிகழ்ச்சிகளைச் சுந்தரரே மறந்து போயின ரென்றாற், பின்னர் இம் மண்ணுலகத்துள்ள அம் மறுப்புரை காரரும் அவரை யொத்த ஏனைச் சிற்றறிவினரான மக்களும் அந்நிகழ்ச்சிகளை அறிந்ததெப்படி? வானுலகத்திற்கும் மண்ணுலகத்திற்குந் ‘தபாற்’ கொண்டு செல்லுஞ் சேவகனாக நாரதனை யுண்டாக்கிக் கதைகள் கட்டிவிட்ட பார்ப்பனரும் அவர்வழிப்பட்டாருங், கைலையின் நிகழ்ச்சிகளை மறுப்புரை காரர் போல்வார்க்கு வந்து அறிவிக்க மற்றொரு நாரதனைக் கதைகட்டிச் சொல்ல மறந்துவிட்டமை பெரிதும் இரங்கத் தக்கதே!

இப்போது ஐரோப்பிய நன்மக்களால் ஆராய்ந்து கண்டு நிறுவப்பட்டிருக்குங் கம்பியில்லாத் தபால் வாயிலாகவாவது அம் மறுப்புரைகாரரும் அவர்தந்தோழருந் திருக்கைலைக்குச் செய்தியனுப்பி, அங்கு நிகழ்ந்த சுந்தரர் கதை நிகழ்ச்சியின் உண்மைதாமாவென்று தெரிந்து உலகிற்கு வெளியிடுவாராக! அவை ஆயிர ஆண்டுகட்குமுன் நிக்ழ்ந்தனவகையால் இப்போது அவைகளைச் சிவபிரான் மறந்துபோயிருப்பர் என்று சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/190&oldid=1583874" இலிருந்து மீள்விக்கப்பட்டது