உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

173

காலங்களில் வெளியிட்ட கருத்துக்களை யெல்லாம் புடைபடவைத்து அளந்து நோக்கி, அவை தம்முள் அவர் முடிவாகக் கண்ட கருத்து இது, அங்ஙனங் காணாததிது வெனத் துணிதலே உண்மை யுணர்வினார்க்குக் கடமையாகும்.

காலங்கடோறும் மக்கட்கு ஒழுகலாறுகள் வேறு படுதலும், அவ்வாற்றால் திருவள்ளுவனார், “அறிதோறு அறியாமை கண்டற்றால்” அவர் தங் கருத்துக்களும் வேறு படுதலுந் தெய்வப் புலமை என்று கூறினமையாலுஞ் செவ்வனே விளங்கும். ஆகவே, பட்டினத்தடிகள் ஒருகாலத்துச் சொன்ன ஒரு கருத்தையே உறுதியெனக்கொண்டு, பிற்காலத்தில் அவர் அதனின் வேறாய்க் கண்ட வேறொரு முடிந்த கருத்தைக் கைக்கொளா தொழிதல் அறிஞர் பால் நிகழாது. முதலிற்றாம் மொழிந்த புறத்துறவினும், உள்ளந் தூயராய் நிற்கும் அகத்துறவே நூறுகோடி மடங்கு சிறந்ததாகுமென அவர் பின்னே வலியுறுத்தி மொழிந்தமை யால், அவ்வாறவர் பின்மொழிந்ததே அவர்தங் கருத்துறுதி யாகுமென்று கடைப்பிடிக்க.

நம்

இங்ஙனங் கூறவே, உள்ளந் தூயரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு, அவர்போல் உள்ளந் தூயரான பரவை சங்கிலியாரது கேண்மையே, 'நல்லாரி ணக்கம்’ ஆவதன்றி, அவரைத் துறந்து ஏனைப் பிறரொடு மட்டுங் கேண்மை பாராட்டுதல் அஃதாகாதென்றுணர்க. தொல்லாசிரியர் 'துறவு' என்பதற்குக் கொண்ட இம் மேதகுபொருளின் மாட்சி யுணராது, உலகத்தவரை ஏமாற்றிப் பழிபாவங்களிற் படும் மாயாவாதப் பகட்டுப் புறத்துறவினைப் பாராட்டும் அம்மறுப்புரைகாரர் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவர் பரவை சங்கிலியார்பால் வைத்த காதற் கெழுதகை நேயத்தினையும் புகழாது மற்று என்செய் மாட்டுவார்! அது

கிடக்க.

16. சிவநேய அடியார் நேயங்கட்குச் சாதி தடை

இனி, அப்பர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியன்மார் நடந்துகாட்டியபடி, நாமுஞ் சாதிவேற்றுமைகளைப் பாராது, சிவநேய அடியார் நேயங்களில் மிக்காருடன்

உண்ணல்

கலத்தல்களைச் செய்து உண்மையன்பினால் ஊடுருவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/198&oldid=1583916" இலிருந்து மீள்விக்கப்பட்டது