உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் 16

பெற்றாலன்றிச், சாதி வேற்றுமைச் செருக்கினாற் சிறியராய் நிற்கும் நாம் அதனையகன்று அன்பினாற் பெரியராய் நிற்கும் பேரின்ப நிலையினை எய்துதல் இயலாது என்று யாம் எமது தலைமைப் பேருரையில் மொழிந்திட்டேம். இதனை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர் உண்மையாகவே எமது கொள்கை யினை மறுக்க வேண்டினால், 'சாதிவேற்றுமையினைச் சிதைத்த அப்பர் சுந்தரர் பெரியராகார்; ஆகையால் அவர் போல் நடப்பது சாதியிற் பெரிய நமக்குச் சிறுமையே தருமல்லது பெருமை தராது; நாம் நமது சாதியுயர்வினையே விடாப் பிடியாய்ப் பாராட்டிக், கல்வியுஞ் சிவநேய அடியார் நேயமும் உடையராயினும் ஏனையெல்லாரையுங் கீழ்மக்க ளாகவே நடத்தி, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாது அவரை யகன்று இறுமாந்தொழுகுதலே நாம் பெரியராதற்குத் தக்க வழியாகும்' என்றன்றோ மறுத்தெழுதல் வேண்டும்? அவ்வாறு செய்தால் உலகந் தம்மைப் பெரிது புறம்பழிக்கு மென்பதை நன்கு கண்ட அம் மறுப்புரை காரர், இயைபில்லாதவைகளை யெழுதி மருட்டுகின்றார். இவரது மருட்டுரை வெறிபிடித்தார்பாலன்றி, உண்மையன்பு வாய்ந்தார் சல்லாது. ஆயினும், அவர் உரைக்கும் போலியுரையின் பெற்றிமையினை ஒரு சிறிது விளக்கிக்காட்டுவாம்.

சாதி

பாற்

அப்பர் சுந்தரர் சாதிக்கட்டைச் சிதைத்து முறையே திருவமுது கொண்டதுந் திருமணஞ் செய்ததும் அவர் பெரியபுராணபிற் செய்த செயல்களாதலால், அவர்போற் பெரியராகாத நாம் அச் செயல்களைச் செய்தலாகாது என்றும், மற்று நாம் பெரியராதற்குச் சிவபிரானையுஞ் சிவனடியாரையும் ஓவாது வழிபடுதலே செயல்வேண்டும் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். அன்பரோடு உடனிருந் துணிவுகொண்டும் மணம்புரிந்தும் அளவளாவுதல் பெரியரானபிற் செயற்பாலன வென்று கூறும் அவருரை கொண்டே, பெரியராகாமற் சிறியராய்ச் செருக்குற்று நிற்குங் காலங்களிற் சாதியுயர்வு தாழ்வு பேசிக்கொண்டு அன்பரோடு அளவளாவுதலின்றி இறுமாந்தொழுகுதலே செயல்வேண்டு மென்பது அவர்தங் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக் கருத்து அவரை யறியாமலே அவர்தம் போலியுரையில் நன்கு புலப்பட்டு நிற்க. அக் கருத்துக்கு மாறாய் அதனை மறைத்துச்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/199&oldid=1583922" இலிருந்து மீள்விக்கப்பட்டது