உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

177

அறிவியக்கத்தால் அவர்பால் நிகழுங் செயல்கள் இவை என்று பகுத்துக் காணாமல், அடியார் செய்யுஞ் செயல்களெல்லா வற்றையுமே திருவருட் செயல் திருவருட்செயல் என்று கூவும் அவர், எல்லா மக்களையும் பிறப்பளவில் வேற்றுமை தோன்றாது படைத்திருக்கும் அத் திருவருட் கருத்துக்கு மாறாக 'இவர் பிறப்பளவில் உயர்ந்தவர்’, 'இவர் பிறப்பளவில் தாழ்ந்தவர்' என்று அருளின்றிக் கரைந்து அல்லற்படுவது பெரிதும் இரங்கற்பாலதேயாம். அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் தமக்கென ஓரறிவுந் தமக்கென ஒரு சயலுமின்றித், தாம் உண்டதும் மணந்ததுந் திருப்பதிகம் பாடினதுந் திருக்கோயில்கட்கு நடந்து சென்றதும் இறைவன் மாட்டு அன்பால் உருகினதும் அடியார்பால் நெஞ்சம் நெகிழ்த்ததும் அவரோடு உரையாடினதும் பிறவுமெல்லாந் தஞ்செயலாகாமல் இறைவன் செயலேயாயின், அவரெல்லாம் உயிரும் உணர்வும் இல்லா வறிய இயந்திரங்கள் (பொறிகள்) ஆய்முடிவரல்லரோ? அவரை யெல்லாந் தனித்தனியே வைத்து அப்பர் சுந்தரர் என்றற் றொடக்கத்துப் பெயர்களால் தனித்தனியே வாழ்த்துதலும் வணங்குதலுமெல்லாம் நம் மாட்டுப் பொருளில் வருஞ்செயல்களாய் முடியுமல்லவோ? அவர் இறைவனைப் பாடினதும் அவர் அவர் இறைவனை வணங்கியதும் அவர் தஞ் செயலாகாமல் இறைவன் செயலே யாயின், இறைவனே தன்னைத்தான் பாடிக்கொண்டான், இறைவனே தன்னைத்தான் வணங்கிக்கொண்டான் என்று முடிக்கப்பட்டு அவை இறைவற்குத் ‘தன்னைப் பற்றுதல்’ என்னுங் குற்றத்தைச் சுமத்து மல்லவோ? உயிரென ஒன்றில்லை, எல்லாம் பிரமமேயெனக் கூறும் அம் மறுப்புரை காரர் போல்வாரான மாயா வாதிகட்காயின் அவ்வாறு கூறுதல் பொருந்தும்; மற்றுப்,

“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்

பதியினைப் போற்பசு பாசம் அநாதி”

என்றும்,

“அதுவென்னும் ஒன்று அன்று அதுவன்றி வேறே அதுவென்று அறி அறிவும்உண்டே”

(திருமூலர்)

(மெய்கண்ட தேவர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/202&oldid=1583937" இலிருந்து மீள்விக்கப்பட்டது