உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

❖ LDM MLDMELD -16 →

என்றும் போந்த எம் ஆசிரியர் அருளுரை வழி பிழையாது நின்று, இறைவனைப் போலவே உயிர்களெல்லாந் தமக்கென விழைவு அறிவு செயல்கள் (இச்சாஞானக் கிரியைகள்) உடை வாமெனவும், ஆயினும் அவை மலத்தினால் மறைக்கப்பட்டு நிற்குமெனவுந், தம்மைப் பொதிந்த மலமாசு இறைவன்றன் றிருவருளுதவியால் நீங்க நீங்க அவ்வுயிர்கள் தமக்கிற்கை யாவுள்ள அவ் விழைவு அறிவு செயல்கள் இனிது விளங்கப் பெறுமெனவும், மலத்தை நீக்குதற்கு உதவிசெய்யும் அவ்வ ளவே இறைவன் செயல், அவ் வுதவியைப் பெற்று மலப் பிணிப்பை அவிழ்த்துச் சிவபிரானிடத்துஞ் சிவநேயம் வாய்ந்தாரிடத்தும் விழைவு காண்டு அவரருளையும் அன்பையும் பெறுதற்கான வழி வகைகளை அறிதலும் அதற்கேற்ற முயற்சிகளைச் செய்து நடத்துலுமெல்லாம் புனிதராவா ரெல்லார்க்கும் மெய்யுரிமையாமெனவும் வற்புறுத்து நுவலுஞ் சைவசித்தாந்த உண்மைநெறி பேணும் எம்மனோர்க்காயின் அங்ஙன முரைத்தல் எட்டுணையுஞ் சாலாதென்க.

6

அற்றேல், நம்மாட்டு நிகழும் இறைவன் செயலுக்கும் நஞ்செயலுக்கும் வேற்றுமை என்னையெனிற், காட்டுதும்; பசித்தும் உணவுபெறாமையால் அயர்ந்துறங்கும் மகவினை எழுப்பிப் பால் ஊட்டும் அன்னையின் செயல் போல்வது முதல்வன்றன் அருட்செயல்; அங்ஙனம் எழுப்பி அன்னை தரும் பாலினைப் பருகும் மகவின்செயல் போல்வது

நம்போன்ற உயிர்களின் செயல்; இன்னும் அன்னையின் திருக் கொங்கைகளிற் பாலமிழ்தினை அமைத்துவைப்பது இறைவன் செயல்; மற்றுப், பால்சுரக்கும் நேரமும் மகவின் பசியும் அறிந்து அப் பாலினைத் தன் மகவுக்கு ஊட்டுவது அன்னையின் செயல். இங்ஙனமே, கண் கால் முதலான மிக வியக்கத்தக்க உறுப்புகளோடு கூடிய இவ்வுடம்பை நமக்கு அமைத்துக் கொடுத்தது இறைவன் செயல்; வ்வரிய வுடம்பைப் பெற்ற நாம் அதனைப் பழுதுபடாமற் பாதுகாத்து அதன்றுணையால் நம் அறிவையும் அன்பையும் இன்பத் தையும் வளர்த்து இறைவன் றிருவடிப் பேற்றினை எய்துதல் நம்செயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/203&oldid=1583942" இலிருந்து மீள்விக்கப்பட்டது