உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

179

இவ்வாறு பகுத்து ஆராய்ந்து காண வல்லார்க்கே, இறைவன் நம்பொருட்டுச் செய்யும் படைத்தற்றொழிலைச் சிற்றறிவுடைய நம்மனோர் ஓர் அணுத்துணையுஞ் செய்ய மாட்டுவா ரல்லரென் பதூஉம். அப் படைத்தற்றொழிலைப் பயன்படுத்தி தம்மறிவையும் அன்பையும் வளர்த்து அம் முகத்தால் தமது ஆணவச் செருக்கை அகற்றிக் கொள்ளாத உயிர்களை இறைவன் தனது திருவருளின்பத்திற் படுப்பித்துக் கொள்ள மாட்டுவானல்ல னென்பதூஉம் நன்கு விளங்கும். ஆகவே, குலச்செருக்கு குடிச்செருக்கு செல்வச்செருக்கு கல்விச் சருக்கு முதலான ஆணவக்கறை சிறிதுமின்றி, அன்பினால் அகங்குழைத்துருகி அப்பரும் அப்பூதிகளும் உடனிருந்து திருவமுது கொண்டு அளவளாகியதும், சுந்தரரும் பரவை சங்கிலியாருங் காதற் கெழுதகைமையில் விஞ்சி உடலு முயிரு மெல்லாம் ஒன்றாய்ப் பேரன்பினுருவாய் நின்றதும் பிறவுமெல்லாம் அப் பெரியார்தம் அறிவுமுயற்சி அன்பு முயற்சிகளால் நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவையெல்லாம் இறைவன்செயல் களாகா வென்று கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இவ்வாறன்றி, உயிர்களின் செயல்களை இறைவன் மேலேற்றிக் கூறுதல் கழுவாய் இல்லதொரு பெருங்குற்றமாம் என்பதனையும் உணராது, 'எல்லாம் இறைவன் செயல்' எல்லாந் திருவருட்செயல்' என்று சொல்லிவிட்டமையானே தாம் ஞானக் கடலைக் கரைகண்டவரென நம்பிப் பொது மக்கள் தம்மைப் பாராட்டுவரென்று தமக்கு அவ்வாற்றால் ஒரு பொய்ப் புகழை உண்டாக்கிக் கொள்ளுதலையே விழைந்து, சிவபிரான்றன் இறைமைத் தன்மைக்கும் அடியார் தம் மெய்யன்பின் திறனுக்கும் ஆகாத இழுக்குரைகளை எழுதித், தமது மாயாவாதக் கோட்பாட்டைச் சைவசித்தாந்தம்போற் காட்டும் நாடகவன்மையில் அம் மறுப்புரைகாரர்க்கு

6

நிகராவார் எவருமே யில்லையென்க அற்றேல்,

“நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் றஞ்செய லேயேன் றுந்தீபற”

எனப் போந்த அருளுரையால் மெய்யடிமை பூண்டார் பால் இறைவன் செயலன்றி, அவர்தஞ் செயல் சிறிதுந் தோன்றாதென்பது பெறப்படுகின்றதாலே வெனின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/204&oldid=1583945" இலிருந்து மீள்விக்கப்பட்டது