உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

183

இவ்வாறாகலிற், பிறப்பளவில் உயர்வு சொல்லிக்கொள்ளும் அம் மறுப்புரைகாரர், ‘பார்ப்பனர்' என்றுஞ் ‘சைவவேளாளர்’ என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக் கொள்ளுங் கூட்டத்தாரில் எத்தனைபேர் குணத்தாலுஞ் செய்கையாலும் உயர்ந்தவர்! என்று நடுவுநிலை தவறாது நின்று எண்ணிப் பார்ப்பராயின், ஆயிரவரில் ஐவர்தாமும் நல்லவராக இராமையை அவரே நன்குணர்ந்து கொள்வர்.

இனிச், சிவயோக நிலையில் ஈடுபட்டு நின்று தம்மையும் உலகத்தையும் மறந்து சிவமேயானாரைப் பற்றிப் பேசுதலால் ஈண்டைக்குப் பொருத்தமாவது ஏதும் இன்மையின், அன்னாரைக் குறித்து வறிதே விரித்தெழுதி வழுக்குதலில் அம் மறுப்புரைகாரர் தமக்கு நிகரானவர் எவருமேயில்லை; ஆகவே, ‘அவ்வளவில் அவன் மகிழ்க” என்னும் நயமேகொண்டு அவர் தமது திறனைத் தாமே மெச்சிக்கொண்டு மகிழ்ந்து கிடக்க.

66

இனித், தமிழ்நாட்டவரிற் பெரும்பாலாரைத் தீண்டாதவர் என ஒதுக்கிவைக்குஞ் சாதிக் செருக்கர்கள், அத் தீண்டாதவர் பால் எல்லாவகையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு மூன்று நான்கு வேளை கொழுக்க விலாப் புடைக்கத் தின்று உயிர்வாழ்ந்து வருபவராய்த், தமக்கு அவ் வுதவிகளைச் செய்யும் அவ்வேழை யெளியவர்களுக்கு ஒருவனை நல்லுணவுகூடக் கொடாமல் அவர்கள் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து துன்புறச் செய்வதுடன், அவர்கள் கடவுளை வணங்குவதற்குக் கோயில் களினுள்ளே வருதலும் ஆகாதென்று கொடுமைசெய்வதுந் தெய்வத்துக்கு அடுக்குமா என்று யாம் எழுதிய பகுதிகளைக் கண்டு அம்றுப்புரை காரர் வயிறெரிந்து பட்டுப்போகின்றார். ஏனென்றால் இவரும் இவரோ டொத்தாரும் உயர்ந்த சாதியராம்; மற்றையோர் தீண்டத்தகாத இழிந்த சாதியராம்; ஆதலால், அவரோ டிருந்து கடவுளே வணங்கினால் தமக்கு நரகம் வந்துவிடுமாம். என்னே இவர்தம் பேதைமை! என்னே இவர்தஞ் சாதியிறுமாப்பு! தம்மைப் போலவே கடவுளாற் படைக்கப்பட்ட மக்களை இவ்வளவு குறைத்துப்பேசும் இவர் எவ்வளவு ஈரமற்ற வன்னெஞ்சராய் இருக்கின்றார்! கடவுளின் வியக்கத்தக்க படைப்பாய், அக் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் மக்களில் ஒரு பெரும் பகுதியாரை இழித்துப் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/208&oldid=1583949" இலிருந்து மீள்விக்கப்பட்டது